அதீத தன்னம்பிக்கையும், திறமையும் கொண்ட ஒரு நடிகரால் மட்டுமே எந்த ஒரு கதாபாத்திரத்தையும் கையில் எடுத்து அசத்தமுடியும். ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் ஹிட் ஹீரோவாக ஆன ‘நட்டி’ நட்ராஜ் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் தனது அடுத்த படமான ‘ரிச்சி’ படத்தை எதிர்நோக்கியுள்ளார்.
‘ரிச்சி’ குறித்து நட்ராஜ் பேசுகையில் , ” சுவாரஸ்யமான கதையையும், அழுத்தமான கதாபாத்திரங்களையும் கொண்ட படம் தான் ‘ரிச்சி’. இரண்டு ஹீரோக்களில் ஒருவரான, ரிச்சி கதாபாத்திரத்தை எதேச்சையாக சந்திக்கும் படகு மெக்கானிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் இது. இந்த கதாபாத்திரத்தை இயக்குனர் கவுதம் ராமசந்திரன் அவ்வளவு சிறப்பாகவும் வலுவாகவும் எழுதியுள்ளார். ஒரு கதாபாத்திரம் எவ்வளவு நேரம் திரையில் வருகின்றது என்பதை விட அது எவ்வாறான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது என்பதே முக்கியம் என்பதை நம்புபவன் நான். அவ்வகையில் ‘ரிச்சி’ படத்தின் எனது இந்த கதாபாத்திரம் மற்றும் இக்கதை படமாக்கப்பட்டுள்ள விதம் எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. டிசம்பர் 8 முதல் ‘ரிச்சி’ தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும் ”
‘ரிச்சி’ படத்தை கவுதம் ராமசந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தை ‘Cast N Crew’ நிறுவனம் சார்பில் ஆனந்த் குமார் மற்றும் வினோத் ஷோர்னுர் தயாரித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையில், பாண்டி குமார் ஒளிப்பதிவில் ‘ரிச்சி’ உருவாகியுள்ளது. நிவின் பாலியின் முதல் நேரடி தமிழ் படமான ‘ரிச்சி’ படத்தை ‘Trident Arts’ ரவீந்திரன் தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யவுள்ளார். இப்படத்தில் நிவினுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார் . இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் பரத் மற்றும் லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.