லிப்ரா குறும்பட விழாவில் கலந்துகொள்ளும் கனடா மற்றும் ரஷ்ய குறும்படங்கள்..!

0

Loading

சில விஷயங்கள் சொன்ன நேரத்தில் நடக்காமல் தள்ளிப்போவது என்பது கூட நல்லதற்குத்தான் என்றே நினைக்க தோன்றுகிறது. ஆம்.. தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றான லிப்ரா புரடக்சன்ஸ் குறும்பட இயக்குனர்களுக்கு வெள்ளித்திரை வாசலை திறந்துவிடும் ஒரு முயற்சியாக கடந்த நவ-29ல்  குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தது.
இந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரடக்சன்ஸ். அந்தவிதமாக போட்டிக்கு வந்த 946 படங்களில் இருந்து சிறந்த 53 குறும்படங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டன.
இந்தநிலையில் தான் இந்த விழாவை வரும் ஜன-28ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இப்படி தள்ளி வைப்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. கனடா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்தும் இந்தப்போட்டியில் குறும்படங்கள் கலந்துகொள்ள இருகின்றன. அதுமட்டுமல்ல, சில சர்வதேச திரைப்பட நடுவர்(ஜூரி)களும் இந்த விழாவில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
அதனால் இந்த குறும்பட விழா முன்னைவிட இன்னும் பிரமாண்டமாக, மற்ற குறும்பட விழாக்களுக்கு முன்னோடியான நிகழ்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அதனால் இந்த நீண்ட தாமதத்திற்காக லிப்ரா புரொடக்சன்ஸ் உங்களிடம் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது.

Share.

Comments are closed.