லியோன் ஜேம்ஸ் இசையமைத்து நடிக்கும் ‘வீரா’

0

 1,011 total views,  1 views today

unnamed-4
தன்னுடைய மனதை மயக்கும் இசையால் தமிழ் திரையுலகில் தனெக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருப்பவர், இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனத்தோடு இவர் இணைந்து பணியாற்றிய ‘கோ 2’ மற்றும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படங்கள் நல்லதொரு வெற்றியை தழுவியதை தொடர்ந்து, தற்போது அவர்கள் தயாரிப்பில் அடுத்து உருவாகும் ‘வீரா’ படத்திற்கும் இசையமைக்கிறார் லியோன் ஜேம்ஸ். ராஜாராம் இயக்கத்தில், அதிரடி கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் ‘வீரா’ படத்தில், கிருஷ்ணா, கருணா மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. ‘வீரா’ படத்திற்காக லியோன் ஜேம்ஸ் இசையமைத்து நடித்திருக்கும்  ‘மாமா மயங்காதே’  மியூசிக் வீடியோ வருகின்ற பொங்கலன்று (ஜனவரி 14) வெளியாக இருக்கின்றது.
“இதுவரை யாரும்  கண்டிராத, புத்தம் புதிய சிந்தனையில் உருவாகி இருக்கும் இந்த  ‘மாமா மயங்காதே’ பாடலை வட சென்னையில் படமாக்கி இருக்கின்றோம். அந்தோணி தாசனின் குரல் இந்த பாடலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன். சென்னை மக்கள் மத்தியில் தற்போது  வேகமாக பரவி வரும் ஒரு கலாச்சாரத்தை மையமாக கொண்டு இந்த பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அது என்ன என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ளும் போது, நிச்சயம் வியப்பாக இருக்கும். வருகின்ற பொங்கலன்று நாங்கள் இந்த  ‘மாமா மயங்காதே’ மியூசிக் வீடியோவை வெளியிட முடிவு செய்து இருக்கிறோம்” என்று மிகுந்த உற்சாகத்துடன் கூறுகிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.
 
Share.

Comments are closed.