தள்ளிபோகாதே’ பாடலில் ஆரம்பித்து மிக குறுகிய காலத்தில் 150 மில்லியன்களுக்கும் மேலான பார்வையாளர்களை பெற்று, இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை பெற்றுள்ளது ‘ஒன்றாக என்டர்டைன்மெண்ட்’ யு டியூப் சேனல்.
‘ஒன்றாக’ நிறுவனம் தற்பொழுது தனது எல்லையை விரித்து web series உள் நுழைந்து, ‘Weekend Machan’ என்ற வலை தொடரை அறிவித்துள்ளது.
வார கடைசி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களுக்கான கொண்டாட்டங்களுக்கு ஒன்றாக வாழும் கல்யாணமாகாத நான்கு இளைஞர்கள் போடும் காமெடி திட்டங்களே இத்தொடரின் கதையாகும். இன்றைய இளைஞர்களின் வார கடைசிக்கான வெற்றிகரமாகும் திட்டங்கள், திட்டமிடாத அவர்களது திட்டங்கள், நடைபெறாத அவர்களது திட்டங்கள், திங்களன்று நடந்ததை மறந்தே போகும் மறையும் திட்டங்கள், திட்டங்கள் எப்படி போனாலும் கவலைப்படாமல் அடுத்த வாரத்திற்கு மறுபடியும் திட்டமிடுதல் போன்ற அனைத்தும் அம்சங்களும் இந்த வலை தொடரில் காமெடியாக சொல்லப்பட்டுள்ளது.
இத்தொடரை ஷமீர் சுல்தான் இயக்கியுள்ளார். அர்ஜுன் கிருஷ்ணா இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மதன் குணதேவா ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை கையாண்டுள்ளார். இந்த அணியினர் தான் ‘தாதா சாஹேப் பால்கே’ மற்றும் ‘Behindwoods’ குறும்பட விழாவில் முதல் இடம் பெற்ற ‘நான்8’ படத்தை உருவாக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
”Weekend Machan” தொடரின் டீசர் ‘ஒன்றாக’ சானலில் நாளை செப்டெம்பர் 10 ஆம் தேதி வெளியிட பட உள்ளது. இத்தொடரின் முதல் எபிசொட் அக்டோபர் மாதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.