விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் ‘கடுகு’ திரைப்படம்

0

 907 total views,  1 views today

RO_L4439
தமிழ் திரையுலகிற்கு  தரமான திரைப்படங்களை மட்டுமே வழங்க கூடிய இயக்குநர்களுள் ஒருவராக கருதப்படுபவர், இயக்குநர் விஜய் மில்டன். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கடுகு’ திரைப்படம், தற்போது ரசிகர்கள் மத்தியில் சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம், ஒரு சராசரி மனிதனின் வாழக்கை, அவனின் காதல், அவன் வாழ்க்கையின் உண்மை, என யதார்த்தமான கதையில் விஜய் மில்டன் இந்த படத்தை உருவாக்கி இருப்பது தான். தரமான கதையம்சங்கள் கொண்ட திரைப்படங்களை மட்டுமே  ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு கொண்டிருக்கும், நடிகர் சூர்யாவின் ‘2D என்டர்டைன்மெண்ட்’ தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம், இந்த ‘கடுகு’ படத்தை வருகின்ற கோடை காலத்திற்கு முன் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது. சிங்கம் 3 படத்தோடு இந்த ‘கடுகு’ படத்தின் டீசரும் ஒளிபரப்பப்படுவது மேலும் சிறப்பு.
“எங்களின் கடின உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும்  கிடைத்த பலனாக தான் நாங்கள் இதை கருதுகிறோம். தமிழ் சினிமா மீது அளவுகடந்த பற்றும், காதலும் இருக்கும் சூர்யா சாரோடு நாங்கள் கைக் கோர்த்து இருப்பது, பெருமையாக இருக்கின்றது.  ‘சிங்கம் 3’  வாயிலாக  எங்கள் ‘கடுகு’ திரைப்படம் விளம்பர படுத்தபடுவது, எங்கள் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும். தற்போது கடுகு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது, அதற்காக சூர்யா சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் விஜய் மில்டன்.
Share.

Comments are closed.