விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் “படைவீரன்”

0

Loading

10 TAMIL

படைவீரன்”

தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும்…அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகும் படம் “படைவீரன்”.

பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அம்ரிதா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கின்றார். கதையின் களம் மிகவும் பிடித்திருந்ததால் இயக்குனர் இமயம் பாரதிராஜா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் “கல்லூரி” அகில்கலையரசன், இயக்குநர் மனோஜ் குமார்இயக்குநர் கவிதா பாரதிஇயக்குநர் விஜய்பாலாஜி நித்தீஷ், கன்யா பாரதி, நிஷா, சிந்து, “பிச்சைக்காரன்” சுரேஷ் ஏகா, திண்டுக்கல் அலேக்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கடல்ஓ காதல் கண்மணி படங்களில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்த தனா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். காஞ்சனா 2, நெடுஞ்சாலை படங்களியல் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராஜவேல் மோகன் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கார்த்திக் ராஜா இசைமைத்துள்ளார்.

இறுதிக்கட்ட பணிகளில் நெருங்கியுள்ள “படைவீரன்” படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் அர்விந்த்சாமி வெளியிட்டுள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – மதிவாணன்

கதைதிரைக்கதைவசனம்இயக்கம் – தனா

இசை – கார்த்திக் ராஜா

ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன்

படத்தொகுப்பு – புவன் ஶ்ரீனிவாசன்

கலை இயக்குநர் – சதிஷ் குமார்

பாடல் – தனாப்ரியன்மோகன்ராஜன்

நடனம் – விஜீ சதிஷ்

சண்டை பயிற்சி – தில் தளபதி

நிர்வாக தயாரிப்பாளர் – விஜய்பாலாஜி

மக்கள் தொடர்பு – நிகில்

Share.

Comments are closed.