விரைவில் வெளியாகவுள்ள “ எனக்கெனவே “ வீடியோ சாங் ஆல்பம்

0

 111 total views,  1 views today

தமிழில் இதுவரை எத்தனையோ ஆல்பம் பாடல்கள் வந்துள்ளது. அதில் பல புதுமையானவையாகவும் இருந்துள்ளது. அந்த வகையில் முற்றிலும் புதுமையாக திரைப்படதுறை அனுபவம் கொண்ட பலர் மற்றும் ஜாம்பவான்கள் சிலர் இனைந்து “ எனக்கெனவே “ என்ற ரொமாண்டிக் வீடியோ ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த ரொமண்டிக் மியூசிகல் ஆல்பத்துக்கு இசை கணேசன் சேகர். இவர் தான் G.V.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்த “ ப்ருஸ் லீ “ திரைப்படத்தில் இடம்பெற்ற “ நான்தான் கொப்பன் டா “ சிங்கள் பாடலுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை இயக்குநர் M.ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் ஸ்ரீ
 இயக்கியுள்ளார். கவிஞர் முத்தமிழ் எழுதியுள்ள இப்பாடலை இசையமைப்பாளர் / பாடகர் / நடிகர் என்று பன்முகம் கொண்ட G.V. பிரகாஷ் குமார் பாடியுள்ளார். கபாலி , பைரவா போன்ற சூப்பர் ஸ்டார் படங்களின் படத்தொகுப்பை கவனித்த தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார். ஒளிப்பதிவு :- சுந்தர் ராகவன் இவர் பிரபல ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜின் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்  , நடனம் :- அசார் , கலை :-மதன் , விளம்பர வடிவமைப்பு :- மணிகண்டன்.
 
அழகிய காதல் பாடலான எனக்கெனவே – வில் நாயகனாக ராகேஷ் ராஜன் , நாயகியாக ஸ்முருத்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
 
அனுபவம் வாய்ந்த குழுவால் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை மெட்ராஸ் டெக்கீஸ் நிறுவனம் சார்பில் ஜெகதீசன் R.V , நவநீத பாபு , நரேன் ஆகியோர் தயாரித்துள்ளனர். விரைவில் இப்பாடலின் First Look ப்ரோமோ வெளியாகவுள்ளது. இதைதொடர்ந்து முழு பாடலும் வெளியாகும். பாடலை உருவாக்கியுள்ள இதே குழு ஒன்றாக இனைந்து அடுத்து திரைப்படம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் உள்ளது.
Share.

Comments are closed.

CLOSE
CLOSE