ஒரு திரைப்படத்தை ஆக்கவும் அழிக்கவும் கூடிய சக்தி வாய்ந்தது அதன் படத்தொகுப்பு. திறமையாக , நேர்த்தியாக படத்தொகுப்பு செய்யப்பட்ட எந்த ஒரு படமும் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றி கண்டுள்ளது. பெரிய பட்ஜெட் ஆக்ஷன் படமான ‘விவேகம்’ போன்ற ஒரு பிரம்மாண்ட படத்தில் படத்தொகுப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. தனது புதுமையான விறுவிறுப்பான ‘கட்’ களால் தமிழ் சினிமாவின் முக்கிய படத்தொகுப்பாளர்களில் ஒருவரான ரூபன், அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடித்து, சிவா இயக்கத்தில் , சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் , வெற்றியின் ஒளிப்பதிவில் உருவாகி , ஆகஸ்ட் 24 ஆம் தேதி உலகம் முழுவது பிரம்மாண்டமாய் ரிலீஸாகவுள்ள ‘விவேகம்’ படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.
இது குறித்து படத்தொகுப்பாளர் ரூபன் பேசுகையில், ”’விவேகம்’,படம் முழுவது கைதட்டி கொண்டாடக்கூடிய, ஒரு உண்மையான, பிரம்மாண்டமான சர்வதேச உளவு படம். திரையில் அஜித் சார் தோன்றும் ஒவ்வொரு பிரேமும் பலத்த இடியை போல் மிக வலுவாக இருக்கும். அவரது அசுர உழைப்பை கண்டு வியந்தேன். அவ்வளவு சிறப்பாக அவர் செய்துள்ளார்.அவர் இப்படத்தில் செய்திருக்கும் ஆபத்தான சண்டை காட்சிகள் பார்ப்பவர்கள் வாயை பிளந்து பார்க்கும் வகையில் இருக்கின்றது. இப்படத்தின் ‘தலை விடுதலை’ பாட்டின் காட்சியமைப்பு ‘ஆலுமா டோலுமா’ பாடலை விட பத்து மடங்கு ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். அஜித் சாரின் ரசிகர்களுக்கும் , பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் ‘விவேகம்’ ஒரு மாபெரும் கொண்டாட்டமாக நிச்சயம் இருக்கும். இயக்குனர் சிவா சாருடன் பணிபுரிவது அற்புதமான அனுபவம். எங்கள் இருவருடைய சிந்தனை போக்கில் நிறைய ஒற்றுமை இருப்பதால் எனது பனியை மேலும் திறம்பட செய்யமுடிகிறது. அவர் என் மேல் வைக்கும் நம்பிக்கை எனக்கு மேலும் உழைக்க தூண்டுதலாக இருக்கின்றது. இது ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக இருந்தாலும் இதில் வரும் கணவன் மனைவி காட்சிகள் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது. ‘விவேகம்’ ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆகஸ்ட் 24 அன்று திரை அரங்குகளில் ரசிகர்கள் வெள்ளத்தோடு ‘விவேகம் ‘ படத்தை காண ஆவலோடு இருக்கிறேன்” என்கிறார் ரூபன்.