வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி

0

Loading

எந்த ஒரு படத்துக்கும் ரசிகர்களை தயார்படுத்தும் முதல் ஆயுதம் டீசர் தான். ஒரு சிறந்த டீசரே ரசிகர்களிடம் படத்துக்கான எதிர்பார்ப்பை தூண்டுகிறது. அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் பார்ட்டி. இரு நாட்களுக்கு முன்பு வெளியான பார்ட்டி படத்தின் டீசருக்கு ரசிகர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது.
டீசரில் இருக்கும் புதுமை, இளமை, எனர்ஜி ரசிகர்களை ஈர்க்கும் விஷயங்களால் சமூக வலைத்தளங்களில் பார்ட்டி டீசர் ட்ரெண்டிங்கில் உள்ளது. டீசர் ரிலீஸுக்கு பிறகு படத்தை பார்க்கும் ஆர்வம் இளம்  ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. டீசருக்கு கிடைத்த வரவேற்பால் பார்ட்டி படக்குழு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறது.
சத்யராஜ், நாசர், ஜெய்ராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ஷாம், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ், எடிட்டிங் பிரவீன் கேஎல். வெங்கட் பிரபுவின் படத்துக்கு முதன் முறையாக  இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன்.
Share.

Comments are closed.