கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘சிறிது நேரம் மனிதனாயிருந்தவன்’ என்ற தலைப்பில் மாத்ருபூமி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. கடந்த மாதம் 28ஆம் தேதி கேரளாவில் நடந்த எழுத்தச்சன் திருவிழாவில், ஞானபீட விருதுபெற்ற மூத்த எழுத்தாளர் எம்.டி.வேசுதேவன் நாயர் அந்நூலை வெளியிட்டார். வெளியிட்ட மூன்றே வாரத்தில் வைரமுத்துவின் மலையாளச் சிறுகதைகள் நூலின் இரண்டாம் பதிப்பு அச்சில் இருக்கிறது. மலையாள இலக்கிய உலகமும் வைரமுத்துவை அண்ணாந்து பார்க்க ஆரம்பித்துவிட்டது.