ஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ் P L தேனப்பன் தயாரிப்பில் மெகாஸ்டார் மம்மூட்டி நடிக்கும் இயக்குநர் ராமின் பேரன்பு திரைப்படம் 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சி (Asian Premiere) நாளை (ஜூன் 16-ம் தேதி) திரையிடப்பட இருக்கிறது.
ஜனவரி மாதத்தில் நடைபெற்ற 47-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு திரைப்படத்திற்கு கிடைத்த அங்கிகாரமும் வரவேற்ப்பும் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்பட விழாவில் பேரன்பு திரைப்படம் மூன்று காட்சிகள் திரையிடப்படவுள்ளது.
தயாரிப்பாளர் P L தேனப்பன், இயக்குநர் ராம் மற்றும் தங்கமீன்கள் சாதனா இத்திரைப்பட விழாவில் கலந்துக்கொள்வதற்காக ஷாங்காய் சென்றுள்ளனர்.
காட்சிகள் விபரம் பின்வருமாறு:
காட்சி 1
ஜூன் 16-ம் தேதி 03:45 p.m.
ஹால் 1, ஷாங்காய் ஹாங்கௌ ஜின்யி சினிமா
காட்சி 2
ஜூன் 17-ம் தேதி 03:45 p.m.
ஹால் 7, அரோரா இன்டர்நேஷனல் சினிமா
காட்சி 3
ஜூன் 19-ம் தேதி 08:45 p.m.
ஹால் 6, தி கிராண்ட் நியூ இன்டர்நேஷனல் சினிமா