‘ஸ்ரீ தேவி’ திரையரங்கின் மேலாளர் மற்றும் ஆபரேட்டர் கைது ….

0

 1,555 total views,  1 views today

 ஜீவா – காஜல் அகர்வால் நடிப்பில், ஆர் எஸ் இன்போடைன்மெண்ட்  – எல்ரெட்  குமார்   தயாரிப்பில்,  டீகே  இயக்கிய கவலை வேண்டாம் திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி அன்று வெளியானது…..வெளியான சிறிது  நேரத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற   கவலை வேண்டாம் திரைப்படம், அடுத்த நாளே Tamil Rockers.com, Tamil Yogi.com  போன்ற    இணையத்தளங்களில் கசிந்தது, ஒட்டுமொத்த  படக்குழுவினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது…. இது எங்கிருந்து ஆரம்பமானது என்பதை தற்போது துணிச்சலோடு கண்டிபிடித்தது மட்டுமின்றி, சம்பந்த பட்ட திரையரங்கின் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுத்து இருக்கிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்…
 
 
“எங்கள் கவலை வேண்டாம் படத்தை நாங்கள் ‘கியூப் சினிமா நெட்வர்க்கில் பதிவு செய்து இருக்கிறோம்….;அவர்களின் உதவியால் தான் இதை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது….அரக்கோணத்தில் இருக்கும் ‘ஸ்ரீ தேவி’  திரையரங்கத்தின் மீது நாங்கள் புகார் அளித்து இருக்கிறோம்….இந்த திரையரங்கில் இருந்து தான் எங்களின் கவலை வேண்டாம் திரைப்படம் படமாக்கப்பட்டிருக்கிறது…..போ லீசார் தற்போது திரையரங்கத்தின் மேலாளர் மற்றும் ஆபரேட்டர்ஆகியோரை கைது செய்து இருக்கின்றனர்….” என்று கூறினார் ஆர் எஸ் இன்போடைன்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் எல்ரெட் குமார்…
Share.

Comments are closed.