“ எங்கேயும் நான் இருப்பேன் “ – ஒரு பேயின் காதல் கதையாக உருவாகிறது

0

 949 total views,  2 views today

_V1A0667

லியா பிலிம் கம்பெனி பட நிறுவனம் தயாரிப்பில், ஒரு பேயின் காதல் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் “ எங்கேயும் நான் இருப்பேன் “

இதில் பிரஜின், சுரேஷ்  இருவரும் ஹீரோவாக நடிக்கிறார்கள். தாஜ் அமீர் வில்லனாக நடிக்கிறார். மற்றும் சகிர் மனோலி, ரஷித்,  ஜோபி ரோய், கோவை அர்ஜுன், ஆண்டனி ஜேகப் ஆகியோர் நடிக்கிறார்கள். சாமியார் வேடத்தில் பிரிமுவர்கிஸ் நடிக்கிறார். நாயகியாக கலா கல்யாணி நடிக்கிறார்.இவர் கதிர் வேலனின் காதல் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தவர். மற்றும் சௌமியா, ஆர்.ராதிகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.                                                                                                                           

இசை           –        அப்சல்யூசுப், E.S.ராம்                                                                               

பாடல்கள்    –        நாகமானசி, முருகன் மந்திரம், பாபுராஜ்                                                          

ஒளிப்பதிவு           –        சாலி , எடிட்டிங்   –  சுரேஷ்அர்ஸ்                                                                                                                  

வசனம்        –        நாகமானசி, நாகேந்திரன் அய்யாமணி, பென்னிதாமஸ்                                                       

ஸ்டன்ட்      –        மாபியா சசி /  கலை  – சுஜித்ராய் /  நடனம்   –  ஜோய் மதி,  அஜெய்சிவசங்கர்

தயாரிப்பு நிர்வாகம் –  மனோஜ் , தயாரிப்பு மேற்பார்வை  – தாஜ்அமீர்

இணை தயாரிப்பு  – டாக்டர் பரிமுவர்கீஸ்

தயாரிப்பு  –  அஷ்ரப் பெருங்காடி  

கதை, திரைக்கதை, இயக்கம் –  பென்னிதாமஸ்

படம் பற்றி இயக்குனர் பென்னிதாமஸிடம் கேட்டோம்..

காதலுக்காக படு கொலை செய்யப் படும்  ஒருவனது ஆவி தனது நண்பனின் உதவியுடன் எப்படி பழி வாங்குகிறது  என்பது கதை ! இதில் முழுக்க முழுக்க திகில் இருக்கும் ஒரு பேயின் காதல் கதையாக எங்கேயும் நான் இருப்பேன் உருவாகி உள்ளது. படத்தில் எல்லா காட்சிகளுமே கமர்ஷியல் அம்சங்களைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க பொள்ளாச்சி, கோவை, சென்னை,ஏர்வாடி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் பென்னிதாமஸ்.    

 

Share.

Comments are closed.