10 கதைகளை கொண்ட நகைச்சுவை வகை தொடர் கல்யாணமும் கடந்து போகும்

0

Loading

திருமணங்கள் நகைச்சுவைகளோடு கலக்கும்போது, மொழிகளுக்கும் எல்லைகளுக்கும் அப்பாற்பட்டு பொழுதுபோக்கிற்கான ஒரு பரந்த இடம் கிடைக்கிறது. மிகவும் கொண்டாடப்பட்ட வாஷிங்டனில் திருமணம் என்ற பிரபலமான நாவல் ஆரம்பித்து பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு இது ஒரு மாயாஜாலமாக பல ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
 
தற்போது விமர்சன ரீதியாக பெரிதும்  பாராட்டப்பட்ட திரைப்பட இயக்குனர் நலன் குமரசாமி, அதே ஜானரை டிஜிட்டல் மேடையிலும் கொண்டு செல்கிறார். கல்யாணமும் கடந்து போகும் மூலம் வலைத் தொடரில் பயணிக்க இருக்கிறார் நலன். இது ஒரு 10 கதைகளை கொண்ட நகைச்சுவை வகை தொடராகும். இந்திய திருமணங்களில் நடக்கும் பல்வேறு விஷயங்களை பற்றி இனிமையாக, ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் சொல்லும். தயாரிப்பாளர்கள் நம்புகிற மாதிரி, பார்வையாளர்களுக்கு வெறும் பார்வையாளர் அனுபவத்தை மட்டும் வழங்காமல், அதற்கு பதிலாக திருமண வைபவங்களில் நடக்கும் அபத்தங்களைப் பற்றி அவர்களை சிந்திக்க வைக்கும். இந்தத் தொடரானது வரதட்சணை, காதல், முதியவர்களிடையே உள்ள உறவு, கடல் தாண்டிய காதல், மறுமணம், ஆகியவற்றின் மூலம் 
திருமணம் பற்றிய கருத்துக்களை படம் பிடித்துக் காட்டும்.
 
பொதுவாக கல்யாணம் என்று சொல்லும்போது, ​​’ஓரு நாள் கூத்து’, ‘கல்யாண கலாட்டா’ போன்ற உருவகத்துடன் உடனடியாக ஒப்பிட்டு சொல்வார்கள். இந்த நிகழ்விலிருந்து, ‘திருமணம்’ என்பது எளிதானது என்றாலும், அது அதனுடன் தொடர்புடையவர்களுக்கு மிகவும் சிக்கலானதாக இருக்கலாம் என்று நாம் தொடர்புபடுத்திக் கொள்ளலாம். இந்த வலைத்தொடர் இது சம்பந்தமான பல்வேறு வினாக்களுக்கு பதில் சொல்லும். பல வலைத் தொடர்களுக்கு ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பால், பார்வையாளர்களை வெறுமனே ஒரு பார்வையாளர்களாக மட்டும் வைக்காமல், அவர்களை திரைக்கு கடத்தி வர வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன்”என்கிறார் இயக்குனர் நலன் குமாரசாமி.
 
பார்வையாளர்கள் உறுதிப்படுத்தும் ஒரு விஷயம் என்னவென்றால்,  திருமணங்கள் சார்ந்த எந்தக் கதையும் அதிக பொழுதுபோக்கிற்கு உட்படுத்துகிறது என்பது தான். குறிப்பாக, சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களின் இயக்குனர் நலன் குமாரசாமியின் மேஜிக் பட்டால், இந்த தயாரிப்பு இணையற்றதாக இருக்கும்.
 
Share.

Comments are closed.