Friday, December 13

ஹன்சிகா கொண்டாடும் அர்த்தமுள்ள பிறந்த நாள்

Loading

தமிழ் சினிமா ரசிகர்களின் ‘டார்லிங்’ என அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி இன்று தனது பிறந்தநாளை, விமர்சையாக இல்லாமல் , தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடவுள்ளார். காலையில் தன் தாயார்  ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பிறகு தான் தத்தேடுத்து  வளர்க்கும் ஆதரவற்ற குழந்தைகளோடு தனது பிறந்தநாள் பரிசுகளையும் கேக்குகளையும் பகிரவுள்ளார். ”பகிருதலில் இருக்கும் சந்தோஷம் எதிலும் இல்லை. சின்ன வயதிலிருந்தே பகிரும் எண்ணத்தையும் பழக்கத்தையும் எனது தாயார்  எனது மனதில் பதித்தார். எனக்கு கிடைத்துள்ள பரிகளையும் கேக்குகளையும் இந்த குழந்தைகளுடன் பகிர்வதில் எனக்கு கிடைக்கும் அளவற்ற சந்தோஷம் எனது பிறந்த நாளை மேலும் சிறப்பிக்கும். ”சந்தோஷமாய் இருப்பது, எளியோர்க்கு உதவுவது மற்றும் ஒழுக்கம் கடைபிடிப்பது” என்ற எனது வாழ்க்கை தீர்மானத்தை இந்த வருடமும் பிறந்தநாள் தீர்மானமாக  பின்பற்றவுள்ளேன்” என புன்னகையுடன் கூறினார் ஹன்சிகா.