Tuesday, October 20

ஜி.வி.பிரகாஷ்-கெளதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் ’13’ திரைப்படம்!

Loading

விமர்சன ரீதியில் பாராட்டும் வணிகரீதியில் வெற்றியும் பெற்ற 96 படத்தைத் தயாரித்த நந்தகோபால் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ்-கெளதம் வாசுதேவ் மேனன் பிரதான வேடங்களில் நடிக்கும் படம் 13. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சந்திப்பு பிரசாத் லேபில் நடந்தது.
அப்போது பேசிய ஜீ.வி.பிரகாஷ்…
என்.டி.ஆர். அவர்களின் நூறாவகு பிறந்த நாளன்று இந்தப் படத்தின் ஃபர்ஸ் லுக் வெளியிடப்படுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். நந்தகோபால் தயாரித்த 96 படம் பெரிய வெற்றி பெற்ற காரணத்தால் சென்டிமெண்ட்டாக இந்தப் படத்துக்கும் 13 என்ற நம்பரிலியே பெயர் வைத்திருக்கிறார். 13 என்ற நம்பரை அன்லக்கி நம்பர் என்று சொல்வார்கள். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் பிறந்ததே ஜூன் மாதம் 13ஆம் தேதிதான். ஒரு படத்தில் நடிக்க தயாரிப்பாளர் நந்தகோபாலிடம் 2016ஆம் ஆண்டு அட்வான்ஸ் வாங்கினேன். வெவ்வேறு காரணங்களால் படத்தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டது. 17,18,19,20,21,22 என்று ஆண்டுகள் உருண்டோடின. ஹாரர் கதை ஒன்று இருக்கிறது. நீங்கள் கேளுங்கள் பிடித்திருந்தால் படம் எடுக்கலாம் என்று சொன்னார் தயாரிப்பாளர். ஏற்கெனவே நான் டார்லிங் ஹாரர் படம் செய்திருக்கிறேன். வாரம் ஒரு ஹாரர் படம் வந்து ரசிகர்களை சோர்வடையச் செய்த நிலையில் இந்த ஹாரர் படத்தில் நடிக்க வேண்டுமா என்று யோசித்தேன். ஆனால் கேட்க ஆரம்பித்த 25ஆவது நிமிடத்தில் கதை எனக்குப் பிடித்துவிட்டது. இது வழக்கமான ஹாரர் காமெடியாக இல்லாமல் சீரியஸ், இன்வெஸ்டிகேடிவ், த்ரில்லர், மிஸ்ட்ரி ஜானிரில் இருந்தது. கதையில் வரும் திருப்பங்கள் மற்றும் ட்விஸ்ட் எல்லாம் தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும். எனவே 13 திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களைக் கவரும் படமாக இருக்கும்.

நகைச்சுவை நடிகர் ஆதித்யா கதிர் பேசியதாவது…
எனது வேடத்தில் நடிக்க வைப்பதற்காக இயக்குநர் நிறைய பேருக்கு ஆடிஷன் நடித்தியிருக்கிறார். என் நண்பர்கள் யாரைக் கேட்டாலும் 13 படத்தின் ஆடிஷனுக்குப் போய் வந்தேன் என்பார்கள். டைட்டானிக் படத்தில் ஜாக் கடைசி நேரத்தில் கப்பலில் ஏறுவதுபோல் நான் கடைசியாக இதில் நடிக்கத் தேர்வானேன். டைட்டானிக் படத்தில் ஜாக், இளம் பெண் ரோஸை உஷார் பண்ணியதுபோல் நான் யாரை உஷார் செய்தேன் தெரியும். தயாரிப்பாளர் நந்தகோபாலை உஷார் செய்தேன். அவர் என்னை கதாநாயகனாக்கி அடுத்து ஒரு படம் எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். அடுத்து ஜி.வியை உஷார் செய்தேன். அவர் என்னை தன் கேரவானுக்கு அழைத்துச் சென்று அன்புடன் உபசரித்து எப்படி எல்லாம் காட்டியை பெருமேற்றினால் கை தட்டல் பெறலாம் என சொல்லிக் கொடுத்தார்.

13 படத்தின் இயக்குநர் விவேக் பேசியதாவது…
ஜி.வி.பிரகாஷ் நடித்த படங்களையும் இசையமைத்த பாடல்களையும் ரசித்தபடி இருந்த நான் திடீரென அவரை இயக்க ஆரம்பித்தது ஒரு கனவுபோல் இருக்கிறது. அவர் கதையை ஓ.கே.சொல்லி நடிக்க ஆரம்பித்ததுமே இது பெரிய படமாகிவிட்டது. அடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளே வந்ததும் இன்னும் பெரிய படமாகிவிட்டது. நடிகர் கதிர் படத்துக்குள் வந்ததும் நகைச்சுவைக் காட்சிகள் இன்னும் பெருகேறி இன்னும் சிறப்பாக அமைந்து விட்டது. கதையில் மூன்று நாயகிகள் இருந்தாலும் மூன்று பேருக்குமே முக்கியத்துவமும் சரி சமமான வாய்ப்பும் இருக்கிறது. ஃபாரஸ்ட்டில் நடிக்கும் கதை என்பதால் காஸ்ட்யூம் டிசைனர் வீணா அதற்கேற்றபடி உடைகளை வடிவமைத்து நல்ல அவுட்புட் கொடுத்திருக்கிரார். இசையமைப்பாளர் சித்து இந்தப் படத்தில்தான் எனக்கு அறிமுகம் என்றாலும், இயக்குநர் இசையமைப்பாளர் என்ற உறவைத் தாண்டி நல்ல நட்புடன் புரிதலுடன் புணியாற்றியிருக்கிறோம். படத்தில் இடம் பெறும் இரண்டு பாடல்களையும் அருமையாக இசையமைத்திருக்கிறார் சித்து.

இசையமைப்பாளர் சித்து பேசியதாவது….
என்னை நம்பி இந்தப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஜி.வி.பிரகாஷ் நடித்து நான் இசையமைக்கும் மூன்றாவது படம் இது. இதற்கு முன் இசையமைத்த சிவப்பு மஞ்சள் பச்சை பேச்சிலர் ஆகிய இரண்டு படங்களுமே எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதுபோலவே இந்தப் படமும் எனக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுக்கும் என நம்புகிறேன்.

இந்த நிகழ்வில் நடிகைகள் ஆத்யா, பாவ்யா, ஐஸ்வர்யா ஆகியோர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.