Wednesday, October 1

Month: April 2022

திரையுலக பிரபலங்கள் கொண்டாடும் ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’!

திரையுலக பிரபலங்கள் கொண்டாடும் ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’!

News
ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் 'பயணிகள் கவனிக்கவும்'. மலையாளத்தில் 'விக்ருதி' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பான இந்த படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர்கள் விதார்த், கருணாகரன், சரித்திரன், நடிகைகள் லட்சுமி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி சக்திவேல் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் 'ஆஹா' டிஜிட்டல் தளத்தின் வெளியாகும் முதல் ஒரிஜினல் படைப்பு. இந்த திரைப்படம் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதற்காக திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதில் நட்சத்திர நடிகர்களான சூரி, இயக்குநர்கள் அறிவழகன், சாம் ஆண்டன், ரவிக்குமார், கேபிள் சங்கர், கார்த்திக் யோகி, படத்தின் இயக்குநர் சக்திவேல், நடிக...
“சாணி காயிதம்” படத்துக்காக இயக்குநர் செல்வராகவனை இயக்கிய அனுபவத்தைப் பகிரும் அருண் மாதேஸ்வரன்!

“சாணி காயிதம்” படத்துக்காக இயக்குநர் செல்வராகவனை இயக்கிய அனுபவத்தைப் பகிரும் அருண் மாதேஸ்வரன்!

News
முதல் வெற்றிப் படமான ராக்கி மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திரைப்படத் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்போது தற்போது அவரது அடுத்த   படைப்பான “சாணி காயிதம்” திரைப்படம் பிரைம் வீடியோவில் மே 6 ஆம் தேதி உலகளாவிய பிரீமியராவதில் உற்சாகமாக உள்ளார். பழிக்குப் பழி  கதைக் களம் கொண்ட இந்த ஆக்‌சன்-டிராமாவில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு இட்டுச் செல்லும், பரபரப்பான இப்படம்  கதாநாயகிக்கும் அவளுடைய குடும்பத்துக்கும் ஒரு அநியாயம் இழைக்கப்படுவதுமான  தலைமுறை சாபம் நிஜமாகும் கதையை சித்தரிக்கிறது. பன்முகத் திறன் கொண்ட கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிப்பது பற்றி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூறும்போது.., “நான் மகாநதி திரைப்படத்தில் அவரது நடிப்பைக் கண்டு வியந்தேன். அதனால் சாணி காயிதம்  எடுக்கும் போது இப்படத்...
‘செல்ஃபி எடுத்த இயக்குநருக்கு 10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர் தாணு!

‘செல்ஃபி எடுத்த இயக்குநருக்கு 10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர் தாணு!

News
கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்களில் வெளியானது. மாணவர்களின் கல்வியை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், டி.ஜி.குணாநிதி, நடிகை வர்ஷா பொல்லம்மா, தயாரிப்பாளர் சபரிஷ் ...

ஆந்திர அரசின் அமைச்சராக பதவியேற்றுள்ள திருமதி ரோஜாவுக்கு பாராட்டு விழா!

News
ஆந்திர அரசின் அமைச்சராக பதவியேற்றுள்ள திருமதி ரோஜா செல்வமணி அவர்களுக்கு தென்னிந்திய திரைத்துறை சார்பில் பாராட்டு விழா! ஆந்திர அரசின் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை திருமதி ரோஜா செல்வமணி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். இதனை பாராட்டும் விதமாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவோடு தென்னிந்திய திரைத்துறையினர் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் மே 7 ஆம் தேதி திருமதி ரோஜாவுக்கு பாராட்டு விழா நடத்தவுள்ளனர். இதனை அறிவிக்கும் விதமாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வினில்,தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது… நமது திரைத்துறையை சார்ந்த திருமதி ரோஜா அவர்கள் ஆந்திராவில் கலாச்சார சுற்றுலாத்துறை அமைச்சராகி இருப்பது நமது திரைத்துறை...
மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விதை நிதியை பெற்றுள்ள ஆரக்கள் மூவிஸ்!

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விதை நிதியை பெற்றுள்ள ஆரக்கள் மூவிஸ்!

News
மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விதை நிதியை பெற்றுள்ள ஆரக்கள் மூவிஸ்! சென்னை, ஏப்ரல் 26, 2022: இந்த வருடம் பிப்ரவரி மாதம் தனது பயணத்தை தொடங்கிய இந்தியாவின் முதல் என் எஃப் டி (NFT) திரைப்பட சந்தை தளமான ஆரக்கள் மூவிஸ், மிகக் குறுகிய காலத்தில் திரைத்துறையையும் தாண்டி கவனத்தை ஈர்த்து வருகிறது. திரைப்பட வர்த்தகம் நடைபெறும் முறையில் பெரும் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தொழில்நுட்ப வல்லுநர் செந்தில் நாயகம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஜி கே திருநாவுக்கரசு ஆகியோர் இணைந்து இந்தியாவின் முதல் என்எஃப்டி திரைப்பட சந்தை தளமான ஆரக்கள் மூவீஸை நிறுவியுள்ளனர். என் எஃப் டி (NFT), அதாவாது நான் ஃபங்கபிள் டோக்கன் (non-fungible token) என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் பாதுகாப்பான முறையில் கலை, இசை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற சொத்துகளை ஆன்லைனில் வா...