Thursday, October 2

Month: April 2022

சூரரைப் போற்று படத்ததை இந்தியில் தயாரிக்கிறார் சூர்யா!

சூரரைப் போற்று படத்ததை இந்தியில் தயாரிக்கிறார் சூர்யா!

News
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் இந்தி திரைப்படத்தின் தொடக்க விழா மும்பையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் ‘சூரரை போற்று’ படத்தின் இந்தி பதிப்பின் நாயகனாக அக்ஷய்குமார், நாயகி ராதிகா மதன், இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ‘சூரரை போற்று’ இந்தி ரீமேக் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அபுடான்டியா என்டர்டைன்மென்ட் மற்றும் கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. ஜோதிகா, சூர்யா ஆகியோருடன் இணைந்து தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ர...
“என் தந்தையை நடிகர்விமல் ஏமாற்றிவிட்டார்-தயாரிப்பாளர் மகள் கமிஷனர் அலுவலகத்தில் புகார்புகார்!

“என் தந்தையை நடிகர்விமல் ஏமாற்றிவிட்டார்-தயாரிப்பாளர் மகள் கமிஷனர் அலுவலகத்தில் புகார்புகார்!

News
நடிகர் விமல் மீது ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் கோபி, சிங்காரவேலன் மற்றும் திரைப்பட விநியோகிஸ்தர் கங்காதரன் ஆகியோர் பணமோசடி புகார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது விமல் நடிப்பில் ’மன்னர் வகையறா’ என்ற படத்தின் ஆரம்ப தயாரிப்பாளர் மறைந்த திருப்பூர் கணேசன் அவர்களின் மகள் ஹேமா இன்று (25-04-2022) காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விமல் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியதாவது, பொருள் : ரூபாய் 1,73,78,000/- திருப்பி தராமல் ஏமாற்றி வரும் நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, திருப்பூரில் எளிய குடும்பத்தில் பிறந்து, இறைச்சி கடைகள் நடத்தி, அதன் பின்னர் சிறிய சிறிய தொழில்கள் செய்து தன்னை ஒரு தொழில் அதிபராக நிலை நிறுத்தி கொண்டவர் மறைந்த என் தந்தை கணேசன். சினிமா மீது தீராத ஆவல் கொண்டிருந்த அவரை மூளைச்சலவை செய்து " மன்னர் வகையற...
எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அங்கீகாரம் அளித்த ‘பயணிகள் கவனிக்கவும்’ படக்குழுவினர்!

எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அங்கீகாரம் அளித்த ‘பயணிகள் கவனிக்கவும்’ படக்குழுவினர்!

News
‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும் என படக்குழுவினர் உறுதியளித்திருக்கிறார்கள். 'பயணிகள் கவனிக்கவும்' பட தலைப்பு குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் மற்றும் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் விவின் ஆகியோர் எழுத்தாளர் பாலகுமாரனின் வாரிசை சந்தித்து விளக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் சுகமான தீர்வு காணப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இதுதொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது... '' எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரான 'பயணிகள் கவனிக்கவும்' என்ற திரைப்படம், எதிர்வரும் 29. 4. 2022 ஆம் தேதியன்று ஆஹா டிஜிட்டல் தளத்தில், 'ஆஹா ஒரிஜினல்' படைப்பாக வெளியாகிறது. இந்நிலையில் 'பயணிகள் கவனிக்கவும்' எ...
“பெரிய நடிகர்கள் சினிமாவை வாழ வைக்க மாட்டார்கள்” – கே. ராஜன் பேச்சு!

“பெரிய நடிகர்கள் சினிமாவை வாழ வைக்க மாட்டார்கள்” – கே. ராஜன் பேச்சு!

News
  சிறுவன் யோகேஸ்வரன் பாடி நடித்து உருவாகியுள்ள 'ஹே சகோ  ' இசை ஆல்பம் வெளியீட்டு விழா! இயக்குநர்கள் பேரரசு, ராஜுமுருகன் , தயாரிப்பாளர் கே .ராஜன், பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் ஆல்பத்தை வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்! இந்த ஆல்பத்தை  ரகுராமன், சங்கீதா தயாரித்துள்ளார்கள். பாடல் எழுதி இசை அமைத்து இயக்கியுள்ளார் ஜெய் க்ருஷ் கதிர்.இவ்விழாவில் இயக்குநர் ராஜுமுருகன் பேசும்போது"இந்தப் பாடலைப் பார்த்த போது ஒரு நேர்நிலையான அதிர்வலைகள் பரவுவதை உணர முடிகிறது. கலை வடிவத்தின் நோக்கம் என்று கூறினால் அந்த வடிவம் ஏதாவது ஒரு வகையில் அன்பையும் மனிதநேயத்தையும் நம்பிக்கையையும் ஓர் அங்குல  அளவிலாவது ஏற்படுத்தி உயர்த்த வேண்டும். அந்த வகையில் இந்தப் பாடல் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில்  உருவாகியுள்ளது.சிறுவன் யோகேஸ்வரன் நன்றாக செய்துள்ளான். நான் இங்கே வந்திருப்பது இதற்கு இசையமைத்துள்ள ஜெய...
“கேஜிஎஃப், ஆர்.ஆர். ஆர் ஓடினாலும் லாபம் தராது” – நடிகர் இயக்குநர் ராஜ்கபூர் பேச்சு!

“கேஜிஎஃப், ஆர்.ஆர். ஆர் ஓடினாலும் லாபம் தராது” – நடிகர் இயக்குநர் ராஜ்கபூர் பேச்சு!

News
எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.டி. என்று அழைக்கப்படும் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்துள்ள புதிய படம், ‘மெய்ப்பட செய்’. ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும், மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வேலன். சுயநலத்துக்காக பல பாவங்களைச் செய்து அதிகாரத்தையும், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளையும் பயன்படுத்தி மக்களோடு மக்களாக கலந்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகவும், பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, பட வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகை சந்திப்பு, பிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. தயாரிப்பாளர் நடிகர் P.R. தமிழ் செல்வம் பேசியதாவது…. புதுமுகங்கள் நடித்து...