160 total views, 1 views today
பல எண்ணற்ற படங்களில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்ற நடிகர் விக்ரமின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய இளம் கதாநாயகன் அறிமுகமாகவுள்ளார்.
நடிகர் விக்ரம் சகோதரியின் மகன் அர்ஜுமன் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
சினிமா பள்ளியில் நடிப்பு கலையை முறையே பயின்றுள்ள இவருக்கு சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில், குடும்பத்தினரின் அரவனைப்போடு கலையுலகத்திற்கு அறிமுகமாகிறார் அர்ஜுமன்.