மூட்டு வலி, முதுகு வலி உட்பட அனைத்து வலிகளுக்கும் அறுவை சிகிச்சைகள் இல்லா வலி நிவாரணம் வழங்கும் புதிய சிகிச்சை முறை அறிமுகம்.
பீனிக்ஸ் வலி நிவாரண மையம் என்ற இந்த புதிய மருத்துவமனையின் துவக்க விழா, இன்று வெள்ளி காலை 9.30 மணிக்கு, ( கோடம்பாக்கம், ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபம் அருகில் ) நடைபெற்றது.
மாண்புமிகு நீதியரசர் எஸ்.ஜெகதீசன் அவர்கள் இந்த மையத்தை திறந்து வைத்தார்.
லயன் டாக்டர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த துவக்கவிழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக, மாண்புமிகு நீதியரசர் ரவீந்திரா போஸ், தோழர் “நீதியின் குரல்” சி.ஆர்.பாஸ்கரன், தொழிலதிபர் எம்.எஸ்.மூர்த்தி, லயன் சி.சி.ஜானி, டாக்டர் உயர்திரு குமரவேல், டாக்டர் உயர்திரு பாலாஜி, தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு, சிறப்புறையாற்றினர்.
இதைத் தொடர்ந்து இலவச மருத்துவ முகாம் துவங்கியது.
இந்த முகாம் 25 (இன்று) 26 & 27 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த நவீன சிகிச்சை முறையை அனைவரும் பயண்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரபலங்கள் வலியுறுத்தினர்.
வந்திருந்த அனைவரையும் டாக்டர் K.விஜயராகவன் மற்றும் டாக்டர் S.செந்தில் ராஜா ஆகியோர் வரவேற்றனர்.
இறுதியாக கே.பிரவின் குமார் அவர்கள் நன்றியுறையாற்றினார்.