Saturday, December 14

450 திரையரங்குகளில் சிம்பு -நயன்தாரா நடித்த “சரசுடு”தெலுங்கு திரைப்படம்

Loading

-தமிழில்வெளிவந்து வெற்றிபெற்ற “இது நம்ம ஆளு”திரைப்படம் இரண்டு மொழிகளில் உருவான படம்.தெலுங்கு பதிப்பான “சரசுடு”இம்மாதம் 15ந் தேதி தமிழகம்,ஆந்திரா,கர்நாடகா ஆகிய இடங்களில் சுமார் 450க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளிவருகிறது, இப்படத்தின் வசனம் பாடல்களை டி.ராஜேந்தர் எழுதியுள்ளார்,தெலுங்கில் பல வருடங்களுக்கு முன் வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடிய”உயிருள்ளவரை உஷா”படத்தின் தெலுங்கு பதிப்பான “பிரேமசாகரம்”படத்தை போல இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,சிம்பு-நயன்தாரா ஜோடி நடித்துள்ள இப்படத்தின் இசையை குறளரசன் அமைக்க,பாண்டிராஜன் டைரக்ட் செய்துள்ளார்,சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் இப்படத்தை தயாரித்துள்ளார்.