![]()
ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் நீ Forever பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !
ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்”நீ Forever”.
இப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. “தருணம்” என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..
எடிட்டர் எஸ்.ஏ.நாகார்ஜுன் பேசியதாவது…,
இந்த படத்துக்கு என்னை கூப்பிட்டதுக்கு இயக்குநருக்கு, டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த மாதிரி நல்ல ஒரு படத்தில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம். முதலில் என் அப்பாவுக்கும், அடுத்ததாக எங்கள் குருவுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் புகழ் சாருக்கும், என் நண்பர் மற்றும் இயக்குனர் அசோக் குமார் அவர்களுக்கும் என் பெரிய நன்றி. இந்த படத்தின் கதை உருவாக சுமார் 6 மாதங்கள் முழுக்க அசோக் உழைத்தார். நாங்கள் இந்த படத்தை ஒரு சூப்பரான கான்செப்ட்டாக உருவாக்கி, நல்ல முறையில் எடுத்திருக்கிறோம். இந்த டீம் எனக்கு ரொம்ப பெரிய ஆதரவாக இருந்தது. பல சவால்களை சமாளிக்கவும், படத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரவும் இந்த டீம் முழுமையாக உழைத்தது. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடன இயக்குநர் விஜயராணி பேசியதாவது..,
இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் புகழ் சார், இயக்குநர் அசோக் மற்றும் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. 5 பாடல்களில் 3 பாடல்களை குறைந்த செலவு மற்றும் குறைந்த நேரத்தில் மிகவும் உழைத்து அழகாக படமாக்கியிருக்கிறோம். இந்த படத்தில் ஒவ்வொருவரின் உழைப்பும் திரையில் கண்டிப்பாக தெரியும். இயக்குநர் அசோக் இந்த படத்திற்காக மிகவும் பாடுபட்டு படத்தை, இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இசையமைப்பாளர் அஸ்வின் வழங்கிய பாடல்கள் அனைத்தும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கும். இந்த படம் நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் பேசியதாவது..,
முதலில் இந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு சுமார் இரண்டு வருட பயணம். நாங்கள் ஒரு சிறிய குழுவாக பெரிய கனவுடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கோம். நான் நினைத்ததை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் செய்ய வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எடிட்டர் மற்றும் டீம் முழுவதும் சேர்ந்து வேலை செய்ததால், இசை மற்றும் காட்சிகள் இன்னும் சிறப்பாக வந்திருக்கிறது. நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப குழுவும் மிகுந்த உழைப்புடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறது. மார்ச் 27 அன்று படம் வெளியாகிறது. இது ஒரு புதிய கான்செப்ட்டுடன், புதிய அனுபவத்தை தரும் படம். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து, உங்கள் உண்மையான கருத்துகளை பகிருங்கள். நன்றி.
டாக்டர் வித்யா பேசியதாவது..,
இந்த படம் எனக்கு ஒரு சர்ப்ரைஸாக வந்த வாய்ப்பு. தயாரிப்பாளர் புகழ் சார் அழைத்ததும் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே ஒப்புக்கொண்டேன். பொள்ளாச்சியில் ஒரு பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆனாலும் அது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. இது உணர்ச்சிகள் நிறைந்த குடும்பக் கதை. இளம் தலைமுறைக்கும், பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். எல்லாரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரிக்கவும். நன்றி.
நடிகை சினேகா சக்தி பேசியதாவது..,
இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார், ஈடன் மேம் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமான அனுபவம். இந்த படத்தின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, பிரதோஷ் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றி. குறிப்பாக அர்ச்சனா எனக்கு ஒரு சகோதரி மாதிரி ஆகிவிட்டார். என்னை ஆதரித்த என் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்புக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.
பாடலாசிரியர் கு கார்த்திக் பேசியதாவது..,
இந்த படம் எனக்கு ஒரு சிறப்பான உணர்வு தரும் படம். முதலில் கதை கேட்டபோதே இது ஒரு இளம் தலைமுறைக்கான, புதிய கான்செப்ட் படம் என்று புரிந்தது. இசையும் பாடல்களும் மிகவும் புதுமையாகவும், ரசிக்கத்தக்க வகையிலும் அமைந்துள்ளது. பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இயக்குநர் அசோக் முதல் படம் என்றாலும் மிகவும் சிறப்பாக காட்சிகளை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. பாடிய நிஷாந்த், விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றி. எல்லாரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நடிகர் பிரதோஷ் பேசியதாவது..,
நான் பிரதோஷ். இந்த படத்தில் “ராக்கி” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். படத்திற்காக இயக்குநர் மிகவும் உழைத்துள்ளார். அந்த உழைப்புக்காக இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா மற்றும் முழு குழுவினரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் கலந்து இருக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். எல்லா தலைமுறையினரும் ரசிக்கக்கூடியதாக இருக்கும். அனைவரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி
நடிகர் ஹரி பாஸ்கர் பேசியதாவது..,
இந்த அழகான படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். டிரெய்லரும் பாடல்களும் பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாகவும், புதுமையாகவும் இருந்தது. குறைந்த நாட்களில் எந்த அழுத்தமும் இல்லாமல் இப்படத்தை அழகாக உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. புகழ் சார் ஐடி துறையிலிருந்து சினிமாவுக்கு வந்து, மிகுந்த ஆர்வத்துடன் நல்ல படங்களை உருவாக்கிக் கொண்டிருப்பது மிகவும் சிறப்பு. இந்த படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.
தயாரிப்பாளர் தங்கராஜ் பேசியதாவது..,
இந்த படத்தின் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒரு சிறப்பான படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். டிரெய்லரும் பாடல்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. தயாரிப்பாளர் புகழ் சார் இந்த படத்தை மிகவும் அழகாகவும், சீராகவும் தயாரித்திருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது. இசையமைப்பாளரின் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. முழு குழுவினரின் முயற்சியும் தெளிவாக தெரிகிறது. இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். மேலும் புகழ் சார் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த தயாரிப்பாளராக உயர வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ராஜா பேசியதாவது..,
இந்த படத்தின் டிரெய்லரும் பாடல்களும் பார்த்தபோது, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு முயற்சியாக தெரிகிறது. மிகவும் அழகாகவும் வித்தியாசமாகவும் இந்த நிகழ்ச்சி மற்றும் படைப்பு அமைந்துள்ளது. தயாரிப்பாளர் புகழ் சார் மிகவும் எளிமையான, அர்ப்பணிப்புள்ள மனிதர். அவருடைய முயற்சி இந்த படத்தில் தெளிவாக தெரிகிறது. இயக்குநர் மற்றும் குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒரு சிறந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படம் ஒரு பெரிய வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களும், நல்ல கதைகளும் தொடர்ந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,
சினிமாவை நேசிக்கும் ஒரு மனிதராக, இந்த படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களின் முயற்சிக்கு நான் பாராட்டுகள் தெரிவிக்கிறேன். பல சவால்களை சந்தித்தும் அவர் தளராமல் மீண்டும் ஒரு நல்ல படத்தை கொண்டு வந்திருக்கிறார். இயக்குநர் அசோக் மற்றும் முழு குழுவினரும் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையும், நடனமும் மிகவும் நன்றாக அமைந்துள்ளது. இன்றைய சினிமா சூழலில் நல்ல படங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த துறை வளர்ச்சி அடையும். இப்படத்தை பார்த்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது. நல்ல படமெடுத்தால் ஓடிடி வாங்கிக்கொள்கிறார்கள். அதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழ் சினிமாவில் பிரச்சனைகள் இருந்தாலும், நல்ல விஷயங்களும் இருக்கின்றன. இரண்டையும் சமநிலையாக பார்க்க வேண்டும். இன்றைய சினிமா சூழலில் நல்ல படங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த துறை வளர்ச்சி அடையும். எல்லாரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி.
Trailer Link 🔗https://youtu.be/Z-GvjDHlboE?si=Up2CnIUKl_P6M1ml





