Monday, September 28

பாட்ஷாவின் சமீபத்திய பாடல் ‘டாப் டக்கர்’ டால்பி அட்மோஸில் கிடைக்கிறது!

Loading

இதுபோன் வகைகளில் முதல் முறையாக, பாட்ஷா, அமித் உச்சனா, யுவன் சங்கர் ராஜா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோர் இணைந்து டால்பி அட்மோஸின் ஆழ்ந்த ஒலியில் இந்த இசை உருவாக்கத்திற்கு பங்களித்துள்ளனர்

மும்பை, பிப்ரவரி 12, 2021 – யுனிசிஸ் இன்ஃபோசொல்யூஷன்ஸின் உள்ளமை-லேபிள் சாகா மியூசிக், அமித் உச்சனா, ஜோனிதாவுடன் இணைந்து, இந்திய இசைத் துறையின் மிகவும் பிரபலமான ராப்பர்களில் ஒருவரான பாட்ஷாவைக் கொண்ட ஒரு புதிய ‘டாப் டக்கர்’ என்னும் சிங்கிளை அறிமுகப்படுத்தப்படுவதை இன்று அறிவித்துள்ளது. அமித் உச்சனா மற்றும் ஜோனிதா காந்தியுடன், தென்னிந்தியப் பிரபலங்கள் யுவன் சங்கர் ராஜா, ராஷ்மிகா மந்தனா இதில் பங்காற்றியுள்ளனர். இந்த பாடல் இந்தி, தமிழ் இரண்டிலும் வெளியிடப்படும் மற்றும் Tidal மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் டால்பி அட்மோஸில் ஒளிபரப்பப்படும்.

சாகா மியூசிக் இன் தொழில்நுட்பக் குழுவான யுனிசிஸ் இன்ஃபோசொல்யூஷன்ஸ், DDEX டிஜிட்டல் மதிப்பு சங்கிலித் தரநிலைகளை ஆரம்ப காலகட்டத்திலேயே ஏற்றுக்கொண்டவர்களில் ஒன்றாகும், இது டால்பி அட்மோஸில் மிக்ஸ்டு டிராக்குகளை ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு திறம்பட வழங்க DDEX 4.2ஐ ஏற்றுக்கொண்ட முதல் இந்திய நிறுவனமாக திகழ்கிறது.

இந்த டிராக்கின் வெளியீடு குறித்து யுனிசிஸ் இன்ஃபோசொல்யூஷன்ஸ் துணைத் தலைவர் தில்ஜித் சிங் கூறுகையில், “யுனிசிஸ் இன்ஃபோசொல்யூஷன்ஸில், அனுபவத்தையும் செயல்திறனையும் மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை நாங்கள் எப்போதும் ஆராய்கிறோம். டால்பி அட்மோஸை ஏற்றுக்கொள்வது அதனால் ஒரு இயற்கையான தேர்வாக இருந்தது, ஏனெனில் இது இரு நோக்கங்களையும் அடைய உதவுகிறது. டால்பி அட்மோஸ் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல்; இது பணமாக்குதலுக்கான புதிய சாத்தியங்களையும் உருவாக்குகிறது.

“டால்பி அட்மோஸ் இசை எவ்வாறு உருவாக்கப்படுகிறது மற்றும் நுகரப்படுகிறது என்பதை மறுவரையறை செய்கிறது, இது கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இசையை அனுபவிக்க அனுமதிக்கிறது” என்று டால்பி லெபாரட்டரீஸின், வளர்ந்து வரும் சந்தைகளுக்கான நிர்வாக இயக்குனர் பங்கஜ் கெடியா அவர்கள் கூறினார். “யுனிசிஸ் இன்ஃபோ சொல்யூஷன்ஸ் மற்றும் பாட்ஷா போன்ற திறமையான கலைஞர்களுடன் சேர்ந்து, இந்தியாவில் டால்பி அட்மோஸ் மியூசிக்கின் ஒரு வலுவான லைப்ரரியை நாங்கள் உருவாக்குகிறோம், மக்களுக்கு பிடித்த பாடல்களை ரசிக்க மிகவும் அற்புதமான மற்றும் ஆழ்ந்த வழியை ஏதுவாக்குகிறோம்” என்று கூறினார்.

தனது புதிய வெளியீடு குறித்து, இந்திய ராப்பர் & இசைக்கலைஞர் பாட்ஷா அவர்கள், “எனது புதிய பாடலை டால்பி அட்மோஸில் வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எனது படைப்பு சாத்தியங்களை விரிவுபடுத்துவதற்கும் எனது ரசிகர்களுடன் ஒரு புதிய வழியில் இணைவதற்குமான ஒரு வாய்ப்பை எனக்கு வழங்குகிறது. டால்பி அட்மோஸில் நேயர்கள் டாப் டக்கரை ரசிப்பார்கள் என்றும், முன்பைப் போலவே அதை அனுபவித்து மகிழ்வார்கள் என்றும் நம்புகிறேன்” என்று கூறினார்.

டால்பி அட்மோஸ் இசையைப் பற்றி: டால்பி அட்மோஸ் என்பது மக்களை இசையுடன் ஒரு புதிய வழியில் இணைய அனுமதிக்கும், கவர்ந்திழுக்கும் ஸ்டீரியோ பதிவுகளில் இல்லாத சிறப்பம்சங்களை வழங்கும் ஒரு ஆழ்ந்த ஆடியோ தொழில்நுட்பமாகும். இது கேட்பவர்கள் இணையற்ற தெளிவுடன் உள்ளமைந்த விவரங்களையும் நுணுக்கங்களையும் அனுபவிப்பதை சாத்தியமாக்குகிறது. அது ஒரு சிக்கலான வாத்தியங்களின் ஒருங்கிணைப்பாகவோ அல்லது அறையை நிரப்பத்தக்க அற்புதமான பேஸ் கிட்டாராகவோ அல்லது நேயர்களின் இதயத்துடிப்பபை எகிறச்செய்யும் பேஸ் ஒலியாகவோ அல்லது பாடகரின் மூச்சுக்காற்று என எதுவாக இருந்தாலும், அதைத் துல்லியமாக வெளிப்படுத்தும். இத்தொழில்நுட்பம் கலைஞர் விரும்பியபடி ஒவ்வொரு விவரத்தையும் உணர்ச்சியையும் கட்டவிழ்த்து விடுவதற்கு அதிக இடத்தையும் சுதந்திரத்தையும் தருகிறது.

யுனிசிஸ் இன்ஃபோ சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் பற்றி.

யுனிசிஸ் இன்ஃபோ சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், யுனிசிஸ் குழுமத்தின் முதன்மை நிறுவனமாகும் மற்றும் இது 2005 இல் கர்னாலில் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்துடன் தனது செயல்பாடுகளைத் துவக்கியது மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு. சுமீத் சிங் அவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. யுனிசிஸ் என்பது ஒரு ஒருங்கிணைப்பு, விநியோகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமாகும், இது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் 150+ நிபுணர்களுடன் தனது இருப்பினைக் கொண்டுள்ளது. இந்திய பிராந்திய இசையை உலகளாவிய டிஜிட்டல் இயங்குதளங்கள் மற்றும் டெல்கோஸுக்கு அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்த இந்நிறுவனம், இந்தியாவின் 41 வெவ்வேறு மொழிகளில் உள்ளடக்கங்களை வழங்குகின்றன. இந்தியா முழுவதும் பரவியுள்ள 250 க்கும் மேற்பட்ட இசை லேபிள்களிலிருந்து நாங்கள் உள்ளடக்கங்களை இந்நிறுவனம் வழங்குகிறது.

மொபைல் போன்ற சிறிய திரைகளிலிருந்து சினிமா தியேட்டர்கள் போன்ற பெரிய திரை வரை, அனைத்து வகையான ஊடகங்களிலும் உள்ளடக்கங்களை வெளியிடுவதற்காக யுனிசிஸ் உலகெங்கிலும் சொந்த உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது. Spotify, Apple Music, Netflix, Amazon, YouTube, Deezer, Tidal, Saavn, Gaana, Wynk மற்றும் பல்வேறு பிற அடித்தளங்களுடன் இந்நிறுவனம் நேரடியாக ஒருங்கிணைந்துள்ளது. இந்தியா, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான், குவைத், பிஜி, கத்தார், ஓமான் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் பரவியுள்ள 21 மொபைல் ஆபரேட்டர்களுடன் அவர்கள் நேரடியாக வேலை செய்கிறார்கள். தணிக்கை மற்றும் உள்ளடக்க விநியோகத்திற்கான BBFC மற்றும் MPS உடன் நேரடி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் உள்ளமை லேபிள் சாகா மியூசிக் பஞ்சாபி இசை மற்றும் சினிமாவிலிருந்து உள்ளடக்கத்தை வழங்கும் மிகவும் பிரபலமான மற்றும் பிரீமியம் இசை லேபிள்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் பஞ்சாபி பிரீமியம் திரைப்படங்களின் மிகப்பெரிய லைப்ரரிகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. நெட்ஃபிளிக்ஸ் பஞ்சாபி வகையை இயக்குவதில் சாகா இசை முக்கிய பங்கு வகித்தது. நெட்ஃபிளிக்ஸ் இல் கிடைக்கும் 80% க்கும் மேற்பட்ட பஞ்சாபி திரைப்படங்கள் சாகா மியூசிக்கால் வழங்கப்படுபவையாகும்.