![]()
தமிழ்நாடு அரசின் 2019ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை Monster திரைப்படத்தில் நடித்ததற்காக வழங்க உள்ள தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் கனவுகளை வளர்த்த, என் கலைக்கு வடிவம் கொடுத்த இந்த மண்ணின் – தமிழ்நாடு அரசின் இந்த விருதினை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
எனது இந்த 14 ஆண்டின் திரை உலக வாழ்வில் இந்த விருதானது ஒரு முக்கிய அங்கீகாரம். Monster திரைப்படத்தின் இயக்குனர் திரு. நெல்சன் அவர்களுக்கும், திரு. S.J. சூர்யா அவர்களுக்கும், தயாரிப்பாளர் திரு. S.R. பிரபு அவர்களுக்கும் திரு. S.R. பிரகாஷ்பாபு அவர்களுக்கும் எனது நன்றிகள்.
இந்த பயணத்தில் எனக்கு எப்பொழுதும் ஆக்கபூர்வமான விமர்சனம் அளித்து என்னை ஊக்குவித்த ரசிகர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் என் நிலையான பலமாக இருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி.
வரும் ஆண்டுகளிலும் மேலும் நல்ல திரைக்கதைகளை தேர்வு செய்து நல்ல கதாபாத்திரங்களில் தொடர்ந்து உங்களை சந்திக்க வேண்டும் என்பதே எனது ஆசை. உங்கள் உறுதுணையோடும் விமர்சனங்களோடும் எனது இந்தப் பயணத்தைத் தொடர விரும்புகிறேன்.
என்றும் அன்புடன்
கருணாகரன்


