20 total views, 1 views today

இப்படத்தை எபிக் தியேட்டர் சார்பாக ஹரிஹரன் தயாரிக்கிறார். படத்தில் நாயகனாக நிஷாந்த் ரூஸோ நடிக்கிறார் இவர் இதற்கு முன்பாக பன்றிக்கு நன்றி சொல்லி, பருந்தாகிறது ஊர் குருவி ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஜூட் ரொமாரிக் (jude Romaric). இப்படத்திற்கு இணை தயாரிப்பு தனபால் கணேஷ், ஒளிப்பதிவு லோகநாத் சஞ்சய், இசை ஜேடி, படத்தொகுப்பு தியாகு.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஏற்காடு மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இப்படத்தின் கதை பற்றிய இயக்குனர் கூறுகையில் இது ஒரு ஆக்ஷன் திரில்லர் வகையைச் சார்ந்த படம். இப்படத்தின் மையக்கதை என்னவென்றால் ஆசையே எல்லா அழிவுக்குமான காரணம் , விழிப்புணர்வு பெறுதல் , அறிதல், புரிந்து கொள்ளுதல் ஆகிய மூன்றையும் திரைக்கதையாக கொண்டு இப்படம் இருக்கும் என கூறினார்.

