ரஜினி ரசிகன் 25வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம். சின்ன ரஜினிகாந்த் தீனா அவர்களின் கதை திரைக்கதை வசனம் தயாரிப்பு நடிப்பு இயக்கத்தில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியான படம் ரஜினி ரசிகன். பல திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்து வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் 25 வது நாள் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. விழாவில் ஊமை விழிகள் படத்தின் இயக்குனர் அரவிந்த்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு படக் குழுவினருக்கு கேடயங்களை வழங்கினார். விழாவில் பேசிய திரு.அரவிந்தராஜ் அவர்கள் சின்ன ரஜினிகாந்த் தீனா அவர்களை வெகுவாக பாராட்டினார். மற்றும் பட குழுவினரையும் பாராட்டினார். ஐம்பதாவது நாள் நூறாவது நாள் விழாவிலும் கலந்து கொள்வேன் என்று உறுதிமொழி அளித்தார்.