கே.பாக்யராஜ் இயக்கி நடித்த ‘முந்தானை முடிச்சு’, 1983 ஜூலை 22ம் தேதி ரிலீசானது. ஹீரோயினாக ஊர்வசி அறிமுகமானார். பூர்ணிமா ஜெயராம், தீபா, தவக்களை, கோவை சரளா, நளினிகாந்த் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்தார். ஏ.வி.எம் புரொடக்சன்ஸ் தயாரித்தது.
தற்போது இப்படம் சசிகுமார் நடிப்பில் ரீமேக் செய்யப்படுகிறது. கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்புகளை கே.பாக்யராஜ் ஏற்றுள்ளார். Jsb பிலிம் ஸ்டூடியோஸ் சார்பாக jsb சதீஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.