Sunday, November 29

Blog

ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழக அரங்கில் எதிரொலித்த “நீ தான் தமிழன்” பாடல்

ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழக அரங்கில் எதிரொலித்த “நீ தான் தமிழன்” பாடல்

News
கடந்த ஆண்டு ஜனவரி 1, புத்தாண்டு தொடங்கியபோது கூட, யாரும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று ஓராண்டு தாண்டிய சரித்திரம் அது. தமிழர்களின் தன்மானம் காக்கும் மறவர்களாக, இளைஞர்கள் சென்னை மெரினாவில் களம் இறங்கி தொடங்கி வைத்த அறவழி போராட்டம் ஈட்டிய வெற்றி, பொன் எழுத்துகளில் பொறிக்க வேண்டிய வரலாறு அல்லாமல் வேறு என்ன?! அந்த வரலாற்றுக் கதையைப் பின்னணியாகக் கொண்டு அஹிம்சா புரொடக்ஷன்ஸ் சார்பில், உருவாகியிருக்கும் "ஜல்லிக்கட்டு 5-23, 2017" திரைப்படத்தின் 2வது பாடல், சிறப்பு மிக்க ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் அமைந்துள்ள கலைமகளின் அந்த தலைக்கோவிலில் - அல்ட்ரிச் ஹாலில், "நீ தான் தமிழன்" எனத் தொடங்கிய அப்பாடல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் எக்காரணம் கொண்டும் ஜல்லிக்கட்டை கைவிடக் கூடாது என, அதைத் தக்கவைக்க தொடர்ந்து முயற்சி செய்து வரும் காங்...
ராஜு முருகனின் ‘ஜிப்ஸி ’

ராஜு முருகனின் ‘ஜிப்ஸி ’

News
  ராஜு முருகனின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் தொடக்கவிழா நேற்று (15.02.18) சென்னையில் நடைபெற்றது. ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில்  S.அம்பேத்குமார் தயாரிக்கும் படம்‘ஜிப்ஸி ’. இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன்.    குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கும் ‘ஜிப்ஸி ’படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதன் போது முன்னணி இயக்குநர்களான பா. ரஞ்சித், வினோத், பிரம்மா, சத்யா ஆகியோர்களும், பிரபல தயாரிப்பாளர்களான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், எஸ் ஆர் பிரபு  மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.   சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ் கே செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, ‘அருவி’ படத்தின் எடிட்டரான...
உலகப் புகழ் பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜீதியின்  ‘பியாண்ட்  தி க்லௌட்ஸ்’

உலகப் புகழ் பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜீதியின் ‘பியாண்ட் தி க்லௌட்ஸ்’

News
சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வாங்கிக் குவிக்கும் ஈரானிய இயக்குநரின் திரைப்படம் வெளியிடும் தேதி அறிவிப்பு! டச்சிங்கான கதைகளை தன் படைப்புகளால் பேச வைத்து பலகோடி ரசிகர்களைத் தன் வசம் வைத்திருக்கும் ஈரானிய இயக்குநர் மஜித் மஜீதி, 'பியாண்ட்  தி க்லௌட்ஸ்' என்ற இந்தி திரைப்படத்தை தற்போது இயக்கியுள்ளார். ஈரானிய மொழியில் இல்லாமல் மஜித் மஜீதி இயக்கும் முதல் படம் இது. ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 20 ம் தேதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, புதுமுக நடிகர் இஷான் கத்தார், மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ள இப்படம் கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை நேசிக்கும் சென்டிமென்ட்ஸ்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மஜித் மஜீதி இயக்...
நானும் ஆன்மீகவாதி தான் – பாரதிராஜா பரபரப்பான பேச்சு

நானும் ஆன்மீகவாதி தான் – பாரதிராஜா பரபரப்பான பேச்சு

News
பிரசாத் லேப் தியேட்டரில் "காசு மேலே காசு" இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், P.வாசு, பாண்டியராஜன், தரணி, நடிகர் விவேக், மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசியதாவது.. ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பது ஈஸி ஆனால் காமெடியனாக நடிப்பதற்கு ஹார்சிய உணர்வு நிறைய வேண்டும். ஹார்சிய உணர்வு அதிகம் மிக்கவன் மயில்சாமி அதைவிட இதயம் சுத்தமானவன். மக்களை மகிழ்விப்பதில் மன்னன். எனக்கு ஹார்சிய உணர்வு கொஞ்சம் கூட இல்லை. ஆனால் இந்த படத்தின் அழைப்பிதழ் பார்த்ததும் விழுந்து விழுந்து சிரிச்சேன். இந்தப்படத்தின் பாடல்களை பார்த்தேன் நிச்சயம் இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும். நம் நிலம் களவாடப்படுகிறது, மொழி களவாடப்படுகிறது, கொஞ்சம் விட்டால் இந்த இனமே களவாடப்படும் முழித்துக்கொள். டைனோசர் இனம் அழியக்காரணம் அதனிடம் எதிர்ப்பு சக...
CLOSE
CLOSE