Friday, May 1

Blog

கீர்த்தி சுரேஷ் _ மிஷ்கின் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

கீர்த்தி சுரேஷ் _ மிஷ்கின் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

News
வழக்கறிஞராக தீர்க்கமான பார்வையுடன் மிரட்டும் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் “சத்தியவான் சாவித்திரி” ஃபர்ஸ்ட் லுக் ! Zee studios & Drumsticks Productions தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! Zee studios & Drumsticks Productions சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள “சத்தியவான் சாவித்திரி” படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக், அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. வக்கீல் கூட்டத்திற்கு நடுவே சிவப்பு உடையில், தீர்க்கமான பார்வையுடன் திரும்பி பார்க்கும் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற...
மே 15 ஆம் முதல் பிரைம் வீடியோவில் வெளியாகும் ‘EXAM’இணைய தொடர்!

மே 15 ஆம் முதல் பிரைம் வீடியோவில் வெளியாகும் ‘EXAM’இணைய தொடர்!

News
பிரைம் வீடியோ - புஷ்கர் & காயத்ரி - வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films)   - A.சற்குணம் - கூட்டணியின் 'எக்ஸாம் - EXAM' தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு! இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள 'எக்ஸாம் -  EXAM' எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில் தேசிய விருதை வென்ற இயக்குநரான ஏ சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எக்ஸாம் -  EXAM'   இணைய தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஏழு அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந...
துருவ நட்சத்திரம் படக்குழுவின் அறிக்கை!

துருவ நட்சத்திரம் படக்குழுவின் அறிக்கை!

News
துருவ நட்சத்திரம் படக்குழுவின் அறிக்கை! “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தின் வெளியீட்டிற்கு வழிவகை செய்துள்ளார் மாண்புமிகு நீதிபதி திரு. செந்தில்குமார் ராமமூர்த்தி. எங்கள் "துருவ நட்சத்திரம்" திரைப்படத்தின் தயாரிப்பில் செய்யப்பட்டுள்ள பெரும் முதலீடு, மற்றும் இத்திரைப்படத்துடன் தொடர்புடைய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரின் வாழ்வாதாரம் மற்றும் திரை வாழ்க்கையை கருத்தில் கொண்டு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. செந்தில்குமார் ராமமூர்த்தி அவர்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். படத் தயாரிப்போடு தொடர்புடைய அனைத்து தரப்பினரின் நலன்களும் போதுமான அளவு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், சில நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்புகளுடன் திரைப்படத்தை வெளியிட அவர் உத்தரவிட்டுள்ளார். ஒரு வாரத்திற்கும் மேலாக கணிசமான நேரத்தை ஒதுக்கி, சம்பந்தப்பட்ட அனைத்து ...

கர _ விமர்சனம்

News
கர _ விமர்சனம் விவசாயிகள் நிலத்தின் மீது பெற்ற கடன் வட்டி, அபராத வட்டி, இத்யாதி என்று வளர்ந்து அவர்களை மூழ்கடிக்கும் நிலையை ஆழமாக விவரிக்கும் படம் 'கர என்று சுருக்கமாக ஒரே வரியில் படத்தை விமர்சித்து அதற்கு மகுடம் சூட்டலாம். இயக்குநர் விக்னேஷ் ராஜா - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள 'கர', வெறும் திருடன்-போலீஸ் ஆட்டம் மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஒரு அழுத்தமான அரசியல் பேசும் படம். தன்னிடமுள்ள 'திருடன்' என்ற கரையைத் துடைக்கப் போராடும் கரசாமி, தன் ஊரையும் குடும்பத்தையும் சூழ்ந்துள்ள கடன் எனும் கரையைத் துடைக்க மீண்டும் திருட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறான். வளைகுடா நாட்டுப் போர் எப்படி இங்கே ஒரு சாதாரண விவசாயியின் டிராக்டர் கடனைப் பாதிக்கிறது என்ற உலகளாவிய அரசியலை, உள்ளூர் த்ரில்லர் பாணியில் கோர்த்த விதம் இயக்குநரின் புத்திசாலித்தனம். படத்தின் அச்சாணியே தனுஷ்தான். வசனங்களை விட மௌ...
Amazon Prime Video தளத்தில் வெளியாகும் ‘மூன்றாம் பிறை’!

Amazon Prime Video தளத்தில் வெளியாகும் ‘மூன்றாம் பிறை’!

News
டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை திரைப்படம் மே 1, 2026 முதல் Amazon Prime Video தளத்தில் வெளியாக உள்ளது! 1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று வரை திகழ்கிறது. டி. ஜி. தியாகராஜன் மற்றும் ஜி. சரவணன் தயாரிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய இந்த திரைப்படத்தை பாலு மகேந்திரா எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இளையராஜா இசையமைத்த இந்த படத்தின் “கண்ணே கலைமானே”, “பொன்மேனி உருகுதே”, “பூங்காற்று புதிதானது” போன்ற என்றென்றும் நிலைக்கும் பாடல்கள் தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. நெகிழ்ச்சியான கதை சொல்லல், கவிதைநயம் மிக்க காட்சியமைப்பு மற்றும் மறக்க முடியாத உச்சக்கட்ட காட்சியால் இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் மைல்கல்லாக போற்றப்படுகிறது. இந்த திரைப்படத...
யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் !

யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் !

News
CinemaCon வெற்றிக்கு பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ திரைப்பட வெளியீடு மாற்றம் – உலகளாவிய ரிலீஸுக்காக புதிய தேதி விரைவில் அறிவிப்பு! KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' ( Toxic:A Fairy Tale for Grownups ) திரைப்படத்தின் வெளியீடு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 2026 ஜூன் 4 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், தற்போது புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, CinemaCon நிகழ்வில் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக முக்கிய நபர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு, படத்தை மேலும் பெரிய அளவில் சர்வதேச சந்தைகளில் வெளியிட வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது....
சன் நெக்ஸ்ட் தளத்தில் ஏப்ரல் 30 முதல் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ அதிரடி ஆரம்பம்!

சன் நெக்ஸ்ட் தளத்தில் ஏப்ரல் 30 முதல் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ அதிரடி ஆரம்பம்!

News
ராக்ஸ்டார் DSP-யின் மற்றொரு முகத்தை காட்டும் ஜாலி ஓ ஜிம்கானா - சன் நெக்ஸ்ட்-இன் புதிய நிகழ்ச்சி! அவரது துள்ளல் இசையில் நீங்கள் ஆடியிருப்பீர்கள்; அவரது மெல்லிசையில் உருகியிருப்பீர்கள். ஆனால், 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் நீங்கள் காணப்போகும் தேவி ஸ்ரீ பிரசாத் முற்றிலும் புதியவர். சன் நெக்ஸ்ட் (Sun NXT) தளத்தின் பிரத்யேக டாக் ஷோவின் முதல் எபிசோடில், எவ்வித திட்டமிடலும் இன்றி, தனது இயல்பான முகத்தை காட்ட வருகிறார் ராக்ஸ்டார் DSP. தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணன் இந்தப் பேட்டியில் டிஎஸ்பியை கேள்விகளால் துளைத்தெடுக்கவில்லை; மாறாக அவருக்குள் இருக்கும் உற்சாகத்தை முழுமையாக வெளியே கொண்டு வருகிறார். கட்டுப்பாடற்ற விளையாட்டுகள், இதுவரை கேட்டிராத ரகசியங்கள் எனத் திரையில் ஒரு மேஜிக் நிகழப்போகிறது. "நான் இசையமைப்பாளர் டி.எஸ்.பி.யாக அங்கே வரவில்லை; உண்மையான தேவியாக, மனதார மகிழ்ந்த தருணங்கள் அவை," என ...
‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
'லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு – பின் தயாரிப்பு பணிகள் முழு வேகத்தில்! சென்னை – ஏப்ரல் 29, 2026 “பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடிப்பில் ரொமான்டிக் எண்டர்டெய்னராக உருவாகும் Love Oh Love திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும், உற்சாகமும் நேரத்தியும் நிறைந்த அட்டவணைக்குப் பிறகு வெற்றிகரமாக இன்று நிறைவு பெற்றுள்ளது. மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், பெரும்பாலும் சென்னை நகரில் படமாக்கப்பட்டுள்ளது. நகரத்தின் தனித்துவமான நகர்ப்புற அழகையும், நவீன காதல் கதைக்கான பின்னணியையும் அழகாக பதிவு செய்துள்ளது. மேலும் சில முக்கிய காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், படத்தின் First Look-ஐ விஜய் சேதுபதி வெளியிட்டது படத்திற்கு பெரும் கவனத்தை ஈர்த்தது. அவரது ஆதரவும் வா...

கோலிவுட்டின் ‘ புதிய வரவு’ க்ரித்திக் மோகன்!

News
கோலிவுட்டின் ' புதிய வரவு' க்ரித்திக் மோகன்: அஞ்சாமை டூ பிரேக்பாஸ்ட் - ஒரு அதிரடிப் பயணம்! தமிழ் சினிமாவில் அமைதியான அலையாக நுழைந்து, இப்போது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் ஒரு இளம் நாயகன். அவர்தான் க்ரித்திக் மோகன்! கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'பிரேக்பாஸ்ட்' திரைப்படம், இவரை ஒரு மெச்சூர்ட் ஹீரோவாக அடையாளம் காட்டியிருக்கிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, விஜய் வசந்தின் 'அச்சமின்றி' படத்தில் ஒரு சிறு வேடத்தில் தலைகாட்டியவர். அப்போது வந்த வாய்ப்புகளை 'படிப்பு தான் முக்கியம்' எனத் தள்ளி வைத்தவர், இன்று திரையில் மின்னிக் கொண்டிருக்கிறார். கவனிக்க வைத்த கதாபாத்திரங்கள்: சுப்புராம் இயக்கத்தில், வெளியாகி கவனத்தை ஈர்த்த அஞ்சாமை திரைப்படத்தில் நீட் தேர்வால் பாதிக்கப்படும் பிளஸ் டூ மாணவனாக/ விதார்த் மகனாக நடித்து ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கண்களையும் கலங்க வைத்தார். இப்போது காந்த...
சித்திரை திருவிழாவுடன் ‘கருப்பு ‘ இசை வெளியீட்டு விழாவை ஒப்பிட்டுப் பேசி அசத்திய நடிகர் சூர்யா!

சித்திரை திருவிழாவுடன் ‘கருப்பு ‘ இசை வெளியீட்டு விழாவை ஒப்பிட்டுப் பேசி அசத்திய நடிகர் சூர்யா!

News
நடிகர் சூர்யாவின் 'கருப்பு ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர்- இயக்குனர் என பன்முக ஆளுமை திறன் படைத்த ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படத்தில் சூர்யா, திரிஷா, யோகி பாபு, ஆர் ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் ...
CLOSE
CLOSE