Blog
கோலி சோடா 2 திரையரங்க உரிமையை கைப்பற்றிய கிளாப் போர்டு ப்ரொடக்ஷன்ஸ்!
ஒரு சில படங்கள் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நம்முடைய விருப்ப பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும். உத்வேகம் மற்றும் நேர்மறை எண்ணங்களை விதைக்கும் நல்ல கதைகள் தான் உலக அளவில் ரசிகர்களால் ஆரத்தழுவி ஏற்றுக் கொள்ளப்படும். அந்த வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு படம் தான் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான விஜய் மில்டனின் கோலி சோடா. ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்ற கோலி சோடாவின் இரண்டாவது பாகம் டீசர் வெளியானதில் இருந்தே ஒட்டு மொத்தமாக ரசிகர்களை
ஈர்த்து வருகிறது. அழுத்தமான கதை மற்றும் புதிய விஷயங்களோடு வரும் கோலி சோடா 2 இந்த சீசனில் ரசிகர்களை கவரும் படமாக நிச்சயம் அமையும். ரசிகர்கள் மட்டுமல்லாமல், வணிக வட்டாரங்களும் கோலி சோடா 2 மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறார்கள்.
கிளாப் போர்டு ப்ரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்...
வீரத்தின் அடையாளமும், விவேகத்தின் அடையாளமும் கைக்குலுக்கினால்…!
நிஜம்தான். தமிழர்களது வீரத்தின் அடையாளமாக, தொன்றுதொட்டு குறிப்பிடப்படுவதில் ஜல்லிக்கட்டும் ஒன்று. தமிழ் மண்ணான இம்மாநிலத்தில், பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் இந்த வீர விளையாட்டு நடப்பதைத் தடுக்கும் முயற்சிக்கு எதிராக, தமிழ் இளைஞர்களிடம் கடந்த ஆண்டு ஏற்பட்ட எழுச்சியைப் பின்னணியாகக் கொண்டு, 'ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017' என்ற பெயரிலேயே திரைப்படமாக்கியது - அஹிம்சா புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்புக் குழு.
அதேபோல, இன்று விவேகம் என, சொல்லப்படும் அறிவின் அடையாளமாக நிற்கும் பல்கலைக்கழகங்களில் - உலகப் புகழ் பெற்றது ஹார்ட்வேர்ட்! அதில் தமிழ் மொழி தொடர்பான ஆராய்ச்சிக்கும், அதன் வளர்ச்சிக்கும் துணை நிற்க தனி இருக்கை அமைக்கும் முயற்சியில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது.
தமிழோடு தொடர்பு என்பதால் மட்டுமின்றி, தமிழின் சிறப்பு, தமிழர்களின் வீரம் உள்ளிட்ட பலவற்றையும் உலக அளவில் பறைசாற்றத் துடிக்கும் இ...
பட்டாபிராமில் நடைபெற்ற குழந்தைகளுக்கான ஓவிய கண்காட்சி
சென்னை பட்டாபிராம் அடுத்த அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் நடந்து வரும் ‘வெற்றியாளர் பட்டறை’ வகுப்புகள், நமது நாட்டின் அடுத்த தலைமுறையை ‘ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும்’ வளர்க்கும் முயற்சி. இதில் கடந்த சில வருடங்களாக நடக்கும் ‘ஒவிய வகுப்பின்’ மாணவர் படைப்புகளை ஞாயிறன்று ‘11/2/2018’ காலை 10 மணிக்கு காட்சிப்படுத்தினர். இந்த கண்காட்சியையும், கிராம மாணவர்களுக்காக நடைபெறும் ஒவிய போட்டியையும் அமைச்சர் திரு. மாஃபா பாண்டியராஜன் அவர்கள் துவக்கி வைத்தார். மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் திரு.முகுந்தன், தன் இதர நேரங்களில் தன் கிராமத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தன்னலமற்ற பணியாற்றி வருகிறார். இந்த பட்டறையிலிருந்து பல்வேறு கலைகளை கற்று மாணவர்கள் வெகுவாக பயனடைகிறார்கள். இது போன்ற முயற்சிகள் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.
...
அமலாபால் வெளியிட்டிருக்கும் அறிக்கை
நடிகை அமலாபால் வெளியிட்டிருக்கும் அறிக்கை...
ஜனவரி 31ஆம் தேதி சென்னையின் ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் நான் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த ஒருவர் என்னை அணுகி, நடன நிகழ்ச்சியை பற்றி ஒரு சில முக்கிய விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று கூறினார். மலேசியாவில் பிப்ரவரி 3ஆம் தேதி நடக்கும் விழாவுக்கு பிறகு அவருடன் இரவு உணவில் கலந்து கொள்ள அழைத்தார். அப்படி என்ன விஷேசமான டின்னர் என நான் அவரை குறுக்கு கேள்வி கேட்டபோது, அவர் அலட்சியமாக உனக்கு தெரியாதா? என்ற பாணியில் பேசினார். நாங்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் எங்களை சுற்றி யாரும் இல்லாததால் நான் கலவரமானேன். அந்த மனிதர் ஸ்டுடியோவுக்கு வெளியில் போய், என்னுடைய நல்ல முடிவுக்காக காத்திருப்பதாக சொன்னார். நான் என் நலம் விரும்பிகள், வேலையாட்களை என்னை மீட்க அழைத்தேன். அவர்கள் அங்கு வந்து சேர்வதற்கு அரை மணி நேரம் ஆனது. அந்த மனிதரோ அவரின் வழக்கமா...
கார்த்திக் சுப்பராஜின் இணை இயக்குநர் விஜயராஜ் இயக்கும் லிப்ரா புரோடக்ஷன்ஸ் – புரோடக்ஷன் No.4
நளனும் நந்தினியும், சுட்டக்கதை படங்களை தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ள பிரம்மாணடாமான நகைச்சுவை திரைப்படம் "நட்புனா என்னன்னு தெரியுமா". இந்தப் படத்தில் விஜய் டிவி புகழ் கவின் ராஜன் கதாநாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் "நெருப்புடா" அருண்ராஜா காமராஜ், ராஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சிவா அரவிந்த்.
"நட்புனா என்னன்னு தெரியுமா" திரைப்படம் மார்ச் மாதம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தனது "லிப்ரா புரோடக்ஷன்ஸ் - புரோடக்ஷன் No.4 " படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார்.
பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி வெற்றிப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜின் இணை இயக்குந...
5வது ஃபெமினா மிஸ் இந்தியா
5வது ஃபெமினா மிஸ் இந்தியா நிகழ்வு வரும் ஜூன் மாதம் நடக்கிறது. மிஸ் இந்தியா அமைப்போடு இணைந்து இந்தியாவின் பெருமைமிகு மிஸ் இந்தியாவை தேர்ந்தெடுக்கும் நிகழ்வை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்பான்சர் செய்து வருகிறது இந்தியாவின் ஃபேஷன் மையமாக விளங்கும் ஃஎப் பி பி (FBB). கடந்த ஆறு ஆண்டுகளாக கலர்ஸ் உடன் இணைந்த பிறகு, நல்ல வரவேற்பும், கூடுதல் வெளிச்சமும் கிடைத்து வருகிறது.
ஜூன் மாதம் நடக்கும் மாபெரும் இறுதிப்போட்டியில் ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் அழகிகள் பங்கேற்பார்கள். மிஸ் இந்தியா தமிழ்நாடு, மிஸ் இந்தியா ஆந்திர பிரதேசம், மிஸ் இந்தியா கர்நாடகம், மிஸ் இந்தியா கேரளா, மிஸ் இந்தியா தெலுங்கானா என ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் இருந்து தலா மூன்று பேர் பெங்களூருவில் பிப்ரவரி 24ஆம் தேதி கிரவுண் பிளாஸாவில் நடக்கும் தென் மண்டல கிரீடம் சூட்டும் விழா நடைபெறும் விழாவில் கலந்து கொள்வார்கள்.
அதற்கு தமிழகம் சா...
3வது வாரத்தில் அடியெடுத்து வைத்த ‘மன்னர் வகையறா’; உற்சாகத்தில் விமல்..!
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்திருந்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியானது. குடும்ப உறவுகளின் மேன்மையை கலகலப்பான பொழுபோக்கு அம்சங்களுடன் சொல்லியிருந்த இந்தப்படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
அதுமட்டுமல்ல ஒரு படத்தின் ஆயுட்காலம் முதல் வாரத்துடன் முடிந்துவிடுகிற இந்த கடினமான சூழலில் இப்போதும் சுமார் 50 தியேட்டர்களில் ‘மன்னர் வகையறா’ ஓடிக்கொண்டு இருப்பதே இந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான சான்று. இதனால் அளவற்ற மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் இருக்கிறார் விமல்
“இந்தப்படம் நிச்சயம் எனக்கு வெற்றிப்படமாக அமையும், அதன்பின் தான் புதிய படங்களை ஒப்புக்கொள்வேன்” என்று சொல்லி இந்தப்படத்திற்கு தனது முழு உழைப்பயும் தந்து காத்திருந்தார் விமல்... அவரது காத்திருப்பு வீண்போகவில்லை..
ஆம்.. ‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து விமல் 5 படங்கள...




