Blog
விஷாலை உற்சாகப்படுத்திய “தலைவன் வருகிறான்”-“விஷால் ஆன்தம்”!
விஷால் ஆன்தம் குழுவினரை சந்தித்து பாராட்டினார் விஷால். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமாகிய நடிகர் விஷாலின் பிறந்தநாள் கடந்த ஆகஸ்டு மாதம் 29ம் தேதி கொண்டாடப்பட்டது. விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு "தலைவன் வருகிறான்" என்ற “விஷால் ஆன்தம்“ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. விஷாலின் அரசியல் வருகைக்கான முன்னறிவிப்பு தான் இந்த விஷால் ஆன்தம் என்றும் பேசப்பட்டது.
“நேசம் கொண்ட தலைவன் வந்தான்,
நெஞ்சே நிமிர்ந்து நில்லு,
நெருப்பைப் போல தீமை எரிக்கும்
நேர்மை இவன்தான் சொல்லு
வீரம் பாதி ஈரம் பாதி
வெல்லும் எங்கள் விஷால் நீதி…”
என்ற வரிகளுடன் அமைந்த இந்த பாடலை “கொலை விளையும் நிலம்” ஆவணப்படத்தை இயக்கிய க.ராஜிவ்காந்தி இயக்கி விஷாலுக்கு பிறந்த நாள் பரிசாக அளித்தார். இஷான் தேவ் இசையில் முருகன் மந்திரம், பாடல் வரிகளை எழுதி இருந்தார். நிகில் மேத்யூ, இஷா...
பழம் பெரும் நடிகை B.V.ராதா மறைவு – தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்:
பழம் பெரும் தென்னிந்திய திரைப்பட நடிகை .பெங்களூர் விஜய ராதா என்ற B.V. ராதா(69) இன்று பெங்களூருவில் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது
" எங்கள் நடிகர் சங்கம் உறுப்பினரான B.V. ராதா ( membership no : 132 ) இன்று பெங்களூருவில் மரணமடைந்தார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம். 1964-ல் நவகோடி நாராயணா என்ற கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி குமாரி ராதா என்ற பெயரில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட 300 க்கும் அதிகமான படங்களிலும் நடித்து பிரபலமானவர். இறுதி நாள் நடிகர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து சங்கம் செயல்படுகளை ஊக்குவித்து வந்தார். அவரது இழப்பு தென்னிந்திய திரைப்பட துறைக்கு மாபெரும் இழப்பாகும். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதோடு அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் துக்கத்தில்...
அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் அறிக்கை.
பெரும் மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய மன்ற தம்பிகள் அனைவருக்கும் தலைமை மன்றத்தின் சார்பாக ஒரு வேண்டுகோள்.
அண்ணன் சூர்யா அவர்கள் நீட் தேர்வை பற்றி தமிழ் ஹிந்து நாளேட்டில் தம்முடைய கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு சமூகத்தின் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் ஆக்கபூர்வமான ஆதரவு குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எதிர்பாராத விதமாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் மதிப்பிற்குறிய மருத்துவர் தமிழிசை செளந்தரராஜன் அவர்கள் மட்டும் , மேலோட்டமாக விமர்சித்துள்ளார்.அது அவரது கருத்து. அதற்கு எதிர்வினையாக, சமூக வலைத்தளங்களில் உங்களில் சிலர் தரமற்ற வார்த்தைகளால் மருத்துவர் தமிழிசை செளந்தரராஜன் அவர்களை விமர்சிப்பதாக அறிகிறோம். இதனை சூர்யா அண்ணன் அவர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார். கருத்து தளத்தில் வரும் விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்வதும் நமது ஆரோக்யமான செயல்பாடுகளால் எதிர்வினையாற்றுவத...
Thisai Oli – A Book On Advanced Film Lighting Released By Cinematographer Pc Sreeram.
Thisai Oli- a book on advanced film lighting.
CJ Rajkumar’s sixth book on cinematography ‘THISAI OLI’ (a book on advanced film lighting) was launched at SICA.
SICA president PC Sreeram presented the first copy of the book to SICA General Secretary B.Kannan.
PC SREERAM on THISAI OLI
THISAI OLI a must for all filmmakers, film students and film lovers. Best wishes Rajkumar may the force be with you.
---------------------------------------------------------------------------------------------------------------
Thisai oli published by Discovery book palace
price – Rs.350/-
வலைதளத் தொடர் தயாரிக்கும்’ஒன்றாக என்டர்டைன்மெண்ட்’ யு டியூப் சேனல்.
தள்ளிபோகாதே' பாடலில் ஆரம்பித்து மிக குறுகிய காலத்தில் 150 மில்லியன்களுக்கும் மேலான பார்வையாளர்களை பெற்று, இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை பெற்றுள்ளது 'ஒன்றாக என்டர்டைன்மெண்ட்' யு டியூப் சேனல்.
'ஒன்றாக' நிறுவனம் தற்பொழுது தனது எல்லையை விரித்து web series உள் நுழைந்து, 'Weekend Machan' என்ற வலை தொடரை அறிவித்துள்ளது.
வார கடைசி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களுக்கான கொண்டாட்டங்களுக்கு ஒன்றாக வாழும் கல்யாணமாகாத நான்கு இளைஞர்கள் போடும் காமெடி திட்டங்களே இத்தொடரின் கதையாகும். இன்றைய இளைஞர்களின் வார கடைசிக்கான வெற்றிகரமாகும் திட்டங்கள், திட்டமிடாத அவர்களது திட்டங்கள், நடைபெறாத அவர்களது திட்டங்கள், திங்களன்று நடந்ததை மறந்தே போகும் மறையும் திட்டங்கள், திட்டங்கள் எப்படி போனாலும் கவலைப்படாமல் அடுத்த வாரத்திற்கு மறுபடியும் திட்டமிடுதல் போன்ற அனைத...
450 திரையரங்குகளில் சிம்பு -நயன்தாரா நடித்த “சரசுடு”தெலுங்கு திரைப்படம்
-தமிழில்வெளிவந்து வெற்றிபெற்ற "இது நம்ம ஆளு"திரைப்படம் இரண்டு மொழிகளில் உருவான படம்.தெலுங்கு பதிப்பான "சரசுடு"இம்மாதம் 15ந் தேதி தமிழகம்,ஆந்திரா,கர்நாடகா ஆகிய இடங்களில் சுமார் 450க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளிவருகிறது, இப்படத்தின் வசனம் பாடல்களை டி.ராஜேந்தர் எழுதியுள்ளார்,தெலுங்கில் பல வருடங்களுக்கு முன் வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடிய"உயிருள்ளவரை உஷா"படத்தின் தெலுங்கு பதிப்பான "பிரேமசாகரம்"படத்தை போல இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,சிம்பு-நயன்தாரா ஜோடி நடித்துள்ள இப்படத்தின் இசையை குறளரசன் அமைக்க,பாண்டிராஜன் டைரக்ட் செய்துள்ளார்,சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் இப்படத்தை தயாரித்துள்ளார்....





