Sunday, November 29

Blog

உதவி இயக்குனர்களின் உரிமைகளை மீட்டெடுக்க ஒரு புதிய சங்கம்!

உதவி இயக்குனர்களின் உரிமைகளை மீட்டெடுக்க ஒரு புதிய சங்கம்!

News
தமிழ்நாடு திரைப்பட உதவி இயக்குனர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி! தமிழ்நாடு திரைப்பட உதவி இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு சென்னை சாலிகிராமத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர்கள் சற்குணம், ரா வெங்கட், சரவண சக்தி ஆகியோர் கலந்துகொண்டு, உதவி இயக்குநர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்கள். இந்நிகழ்வினில்.. செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் முஜீப்…. இந்த சங்கத்தில் 400க்கும் மேற்பட்டோர், உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சினிமா தொடங்கி நூற்றாண்டுகள் கடந்தும் திரைப்படத்துறையில் உதவி இயக்குனர்களின் அடையாளமும், அங்கீகாரமும், உரிமையும் முழுமையாக கிடைக்காமல் உள்ளது.இந்த சங்கத்தின் மூலம் உதவி இயக்குனர்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்படும். தொழிலாளர் சம்மேளத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் ...
ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம்!

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம்!

News
ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம் #HK15 ! IDAA PRODUCTIONS தயாரிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், நடிகர் ஹரீஷ் கல்யாணின் 15 வது படமாக உருவாகும் #HK15 படத்தின், அதிராகப்பூர்வ அறிவிப்பு போஸ்டர், தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகியுள்ளது. வித்தியாசமான களங்களில் தனித்துவமான கதாப்பத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹரீஷ் கல்யாண், லப்பர் பந்து படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். வடசென்னை வாழ் இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஹைப்பர் கான்செப்டில், வித்தியாசமான ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. லிஃப்ட் படம் மூலம் கவனம் ஈர்த்த, இயக்குநர் வினீத் வரபிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார். IDAA PRODUCTIONS பெரும் பொருட்செலவில் பிரம்...
சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும் “பேடிங்டன் இன் பெரு”

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும் “பேடிங்டன் இன் பெரு”

News
சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும் "பேடிங்டன் இன் பெரு" மைக்கேல் பாண்ட் உருவாக்கிய பேடிங்டன் எனும் கரடியின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட, லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் நகைச்சுவை படமான ‘பேடிங்டன் (2014)’ பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற்றது. அதன் வெற்றியின் அடிப்படையில், ‘பேடிங்டன் 2 (2017)’ என இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டது. முதலிரண்டு பாகங்களையும் பால் கிங் இயக்கினார். முதல் படம், பெருவின் காடுகளிலிருந்து லண்டன் தெருக்களுக்கு இடம்பெயர்ந்து, ப்ரெளன் குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்ட ஒரு மென்மையான மற்றும் கண்ணியமான கரடியைப் பற்றியது. அடுத்த பாகத்தில், செய்யப்படாத குற்றத்திற்காக பேடிங்டன் சிறையில் அடைக்கப்படுகிறது. விடுதலை அடைய தானொரு நிரபராதி என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறது. தற்போது அப்படவரிசையில் மூன்றாவது பாகமாக ‘பேடிங்டன் இன் பெரு’ எனும் படம் வெளியாகிறது. பேட...
நானி நடிக்கும் ‘ஹிட் : தி தேர்ட் கேஸ் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

நானி நடிக்கும் ‘ஹிட் : தி தேர்ட் கேஸ் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

News
'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'ஹிட் : தி தேர்ட் கேஸ் ' படத்தின் முன்னோட்டம் வெளியீடு! *'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் சைலேஷ் கொலானு - வால் போஸ்டர் சினிமா - யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் - கூட்டணியில் உருவான ' ஹிட் : தி தேர்ட் கேஸ் ' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது* 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் மே மாதம் முதல் தேதியன்று வெளியாகும் திரைப்படமான 'ஹிட் : தி தேர்ட் கேஸ்' படத்தில் மிகவும் தீவிரமான மற்றும் ஆக்ரோஷமான அவதாரத்தை வெளியிட உள்ளார். இந்த திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நானி ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் பட வரிசையில் வேகமாக பயணிப்பதால் மட்டுமல்ல.. கிளிம்ப்ஸ், டீசர், பாடல்கள் மற்றும் விளம்பரப்படுத்தும் ஸ்டைலுக்கு கூட பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந...
பிரபுதேவா நடிப்பில் சீனாவில் படமாக்கப்பட்ட ” எங் மங் சங் “

பிரபுதேவா நடிப்பில் சீனாவில் படமாக்கப்பட்ட ” எங் மங் சங் “

News
பிரபுதேவா - லட்சுமி மேனன் நடித்துள்ள " எங் மங் சங் "கோடை கொண்டாட்டமாக வரவிருக்கிறது! வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கி வருகிறது. ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பல திறமையான இயக்குனர்களையும், நடிகர், நடிகைகளையும் அறிமுகப்படுத்திய நிறுவனமாக விளங்கிவருகிறது. ஆர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் “ நான் கடவுள் ”, ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் “ பாஸ் என்கிற பாஸ்கரன் ”, ஜெயம் ரவி நடித்த “நிமிர்ந்து நில் ” போன்ற சூப்பர் ஹிட் படங்கள் உட்பட 50 க்கு மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் நடன புயல் பிரபுதேவாவின் வித்தியாசமான நடிப்பில், “ எங் மங் சங் ” என்ற படத்தை தயாரித்துள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது.17ஆம் நூற்றாண்டில் நடப்பது போன்ற ஒரு கதை அமைப்பில் தொடங்கி, 1980 இல் நடக்க...
‘டெஸ்ட்’ படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான பாடகி சக்திஸ்ரீ கோபாலன்!

‘டெஸ்ட்’ படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான பாடகி சக்திஸ்ரீ கோபாலன்!

News
பாடகி சக்திஸ்ரீ கோபாலன் நெட்ஃபிளிக்ஸின் 'டெஸ்ட்' திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக பிரம்மாண்டமாக அறிமுகமானார் - விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றார்! பிரபல பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன், ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் தயாரித்து இயக்கிய, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான 'டெஸ்ட்' வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமானதன் மூலம் தனது கலைப் பயணத்தில், எழுச்சியுடன் அடியெடுத்து வைத்தார். ஆர். மாதவன், சித்தார்த், நயன்தாரா மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளதுடன், குறிப்பாக அதன் எழுச்சியூட்டும் மற்றும் கதைக்களத்தை விவரிக்கும் விதத்திலான இசைக்கும் பாராட்டை பெற்றுள்ளது. தனது தனித்துவமான குரலுக்காகவும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இந்திய திரைப்படங்களின் இசைக்கோர்வைகளில் இடம்பெற்றுள்ள தரவரிசையி...
தென்னிந்திய சினிமா & டிவி அவுட்டோர் யூனிட் அசோசியேஷனின் அறிக்கை!

தென்னிந்திய சினிமா & டிவி அவுட்டோர் யூனிட் அசோசியேஷனின் அறிக்கை!

News
நாளை முதல் படப்பிடிப்புக்கு அவுட்டோர் யூனிட் அனுப்பமாட்டோம்! தென்னிந்திய சினிமா & டிவி அவுட்டோர் யூனிட் அசோசியேஷனின் அறிக்கை! அவுட்டோர் யூனிட் என்பது கேமரா, லைட்ஸ், ஜெனரேட்டர், ஜிம்மி, பேந்தர், கிரிப்ஸ் மற்றும் ஒளிப்பதிவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு கொடுக்கும் ஒரு தனி முதலாளி அமைப்பாகும். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக இந்த தொழிலை திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் இணைந்து தொழில் செய்து, தற்போது 100 உறுப்பினர்களுடன் தென்னிந்திய சினிமா அண்ட் டிவி அவுட்டோர் யூனிட் அசோசியேஷன் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த சங்கத்துக்கும், தென்னிந்திய தொழிலாளர் சம்மேளனத்துக்கும் எவ்வித தொழில் ஒப்பந்தமும் கிடையாது. ஆயினும் திரைத்துறையின் நலனுக்காக தென்னிந்திய தொழிலாளர் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும், லைட்மேன் சங்கம் மற்றும் டெக்னிசியன் சங்கம் ஆ...
மே 16 ஆம் தேதி வெளியாகும் சூரியின் “மாமன்”!

மே 16 ஆம் தேதி வெளியாகும் சூரியின் “மாமன்”!

News
நடிகர் சூரியின் “மாமன்” திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகிறது ! Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சூரி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, Lark Studios தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது...
4K தரத்தில் திரைக்கு வரும் விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’!

4K தரத்தில் திரைக்கு வரும் விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’!

News
34 வருடங்கள் கழித்து பிரமாண்டமாக ரீ ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்’! ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்களது திரையுலக பயணத்தில் மைல்கல் என்று சொல்லும் விதமாக ஒரு படம் நிச்சயம் அமைந்துவிடும். அப்படி மறைந்த புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மகுடம் சூட்டும் படமாக வெளியான படம் தான் ‘கேப்டன் பிரபாகரன்’. கேப்டன் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக அமைந்த படம் தான் கேப்டன் பிரபாகரன். பெரும்பாலான ஹீரோக்களுக்கு அவர்களது நூறாவது படம் வெற்றியை கொடுக்க தவறியபோது கேப்டன் விஜயகாந்த்திற்கு மட்டும் நூறாவது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை இந்தப்படம் பெற்றுக் கொடுத்தது. அது மட்டுமல்ல, காலத்திற்கும் நிலைக்கும் விதமாக கேப்டன் என்கிற அடைமொழியையும் சேர்த்து அவருக்கு பரிசளித்தது கேப்டன் பிரபாகரன். இந்தப்படம் கொடுத்த வெற்றியின் ஞாபகார்த்தமாக தான் தனது மூத்த மகனுக்கு விஜய ப...
பூஜையுடன் துவங்கிய யோகிபாபு நடிக்கும் படம்!

பூஜையுடன் துவங்கிய யோகிபாபு நடிக்கும் படம்!

News
Dev cinemas Pvt Ltd தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில், யோகிபாபு நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது ! Dev cinemas Pvt Ltd தயாரிப்பில், யோகிபாபு நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் பின்னணியில், ஒரு அழகான காதல் கதையுடன் புதிய படம் உருவாகிறது. தமிழ் புத்தாண்டையொட்டி, இப்படத்தின் படப்பிடிப்பு, அருள் முருகன் கோவிலில் எளிமையான பூஜையுடன், இனிதே துவங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலை பட இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா.ராஜ்மோகன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சென்னையில் இரும்புக்கடை தொழிலாளியான நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வும், அவனது காதலுமாக இப்படம் உருவாகிறது. ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவம் தரும் வகையில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. அ...
CLOSE
CLOSE