Sunday, November 29

Blog

ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸில்பணிபுரிந்த அனுபவம் பற்றி நடிகை சீமா பிஸ்வாஸ்!

ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸில்பணிபுரிந்த அனுபவம் பற்றி நடிகை சீமா பிஸ்வாஸ்!

News
"ஓம் காளி ஜெய் காளி' வெப் சீரிஸில் என்னைக் கவர்ந்ததே அதன் புராணங்களும் சடங்குகளும்தான் " - நடிகை சீமா பிஸ்வாஸ்!* இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவரான நடிகை சீமா பிஸ்வாஸ் மிகவும் கவனமாகத் தனது கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ’பண்டிட் குயின்’, ’காமோஷி’ மற்றும் பல திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பால் பான்-இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், 2003 ஆம் ஆண்டில் வெளியான ‘இயற்கை’ படம் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, 2006 இல் வெளியான ‘தலைமகன்’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மார்ச் 28 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸில் நடித்திருக்கிறார். இந்த வெப்சீரிஸில் பணிபுரிந்த அனுபவம் பற்றி நடிகை சீமா பிஸ்வாஸ் பகிர்ந்து கொண்டதாவது, "புராணங்கள், சடங்குகள் என இந்த வெப்சீரிஸின் கதை ...
ரசிகர்களின் பாராட்டு மழையில் ‘ஸ்வீட் ஹார்ட் ‘ படக் குழு!

ரசிகர்களின் பாராட்டு மழையில் ‘ஸ்வீட் ஹார்ட் ‘ படக் குழு!

News
*ரசிகர்களை சந்தித்து அன்பை பகிர்ந்து வரும் 'ஸ்வீட் ஹார்ட்' படக் குழு* 'மாடர்ன் மாஸ்ட்ரோ ' யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில், ரியோ ராஜ் - கோபிகா ரமேஷ் நடிப்பில் உருவாகி கடந்த 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான 'ஸ்வீட் ஹார்ட்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு வழங்கி வருகிறார்கள். உறவுகள் குறித்த உளவியல் சிக்கலில் தவிக்கும் காதலர்- அவரை காதலிக்கும் காதலி- இந்த ஜோடி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ரசனையாகவும், உணர்வுபூர்வமாகவும் விவரிக்கும் படைப்பாக 'ஸ்வீட் ஹார்ட்' இருந்ததால்... ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து தங்களது ஆதரவினை வழங்கி வருகிறார்கள். அதிலும் யுவன் சங்கர் ராஜாவின் வசீகரிக்கும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் கவரப்பட்ட ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரையரங்கத்திற்கு வந்து தங்களின் மகிழ்ச்சியை உற்சாகத்துடன...
‘சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ இசை வெளியீட்டு விழா!

‘சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ இசை வெளியீட்டு விழா!

News
'சீயான்' விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா! *என்னுடைய தீரா காதல் என் ரசிகர்கள் தான் - சீயான் விக்ரம்* HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், 'சீயான்' விக்ரம், எஸ். ஜே. சூர்யா , சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'வீர தீர சூரன்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் இயக்குநர் எஸ். யூ. அருண்குமார், நடிகர் பிருத்வி, இசையமைப்பாளர் ஜ...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட “எம்புரான்” பட டிரெய்லர் !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட “எம்புரான்” பட டிரெய்லர் !

News
அதிரடி ஆக்சனில் மிரட்டும் “எம்புரான்” பட டிரெய்லர் !!* முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும், பான் இந்தியப் படமான “எம்புரான்” படத்தின் அதிரடி டிரெய்லரை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமூக வலைதளம் வழியே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ஐமேகஸ் பதிப்பில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்... எனது அருமை நண்பர் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் “எம்புரான்” பட டிரெய்லரை கண்டு ரசித்தேன், மிக அற்புதமான டிரெய்லர். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற கடவுள் ஆசிர்வதிக்கட்டும், படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். இந்த டிரெய்லர் இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. "எம்புரான்" டிரெய்லர், ரசிகர்களுக்கு அதிரடியான ஒரு விஷுவல் விருந்தாக அம...
“எம்புரான்” டிரெய்லர் நாளை மார்ச் 20 ஆம் தேதி, ஐமேக்ஸ் பதிப்பில் வெளியாகிறது!

“எம்புரான்” டிரெய்லர் நாளை மார்ச் 20 ஆம் தேதி, ஐமேக்ஸ் பதிப்பில் வெளியாகிறது!

News
மோகன்லால்- பிரித்திவிராஜின் “எம்புரான்” பட டிரெய்லர் ஐமேக்ஸ் பதிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகிறது ! இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பான் இந்தியப் படமான “எம்புரான்” படத்தின் டிரெய்லர் நாளை, மார்ச் 20 ஆம் தேதி, மும்பையில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில், திரையுலக பிரபலங்கள் முன்னிலையில், ஐமேக்ஸ் பதிப்பில் வெளியிடப்படவுள்ளது. “லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாமாக பிரம்மாண்ட பான் இந்திய படைப்பாக உருவாகியுள்ள “எம்புரான்” திரைப்படம், வரும் 2025 மார்ச் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் உலகமெங்கும், ரசிகர்கள் பிரத்தியயேகமாக ரசிக்கும் வகையில், ஐமேக்ஸ் பதிப்பிலும், வெளியாகிறது. இதன் ஒரு பகுதியாக படத்தின் டிரெய்லர் நாளை ஐமேக்ஸ் பதிப்பில் வெளியாகவுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், இயக்குநர் பிரித்திவிரா...
‘வேம்பு’  படக்குழு பங்கேற்ற உலக சாதனை விழா!

‘வேம்பு’  படக்குழு பங்கேற்ற உலக சாதனை விழா!

News
'வேம்பு'  படக்குழு பங்கேற்ற உலக சாதனை விழா! * ஒரு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற நம் பாரம்பரிய கலையான சிலம்பகலையில் ஒன்றான மான் கொம்பு சுற்றும் போட்டியானது நடைபெற்றது, இப்போட்டியில் சிறுவர் சிறுமிகள் பலரும் கலந்து கொண்டனர், அவ்விழாவில் கலந்துகொண்ட வேம்பு படத்தின் நாயகன் ஹரிகிருஷ்ணன் நாயகி ஷீலா மற்றும் இயக்குனர் V. ஜஸ்ட்டின் பிரபு, ஒளிப்பதிவாளர் A. குமரன் பங்கேற்றனர், நடிகர்கள் இருவரும் உலக சாதனை படைத்த சிறுவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர், வேம்பு படம் சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் படம் என்று அவர்கள் முன்னிலையில் பேசினார்கள் மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் வி.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா கதாநாயகியாக நடிக்கிறார். ஜெயராவ், பரி...
மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் வெளியாகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘திரைப்படம்!

மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் வெளியாகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘திரைப்படம்!

News
தொழில்நுட்ப மாற்றங்களுடன் மீண்டும் வெளியாகிறது 'பாஸ் என்கிற பாஸ்கரன் 'திரைப்படம்! 'பாஸ் என்கிற பாஸ்கரன் 'திரைப்படம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மறு வெளியீடு ! இப்போது மறு வெளியீடு செய்கிற படங்களும் வெற்றி பெறும் காலமாகி வருகிறது. எவ்வளவுதான் ஆக்சன் படங்கள் , திகில் படங்கள் வந்தாலும் நகைச்சுவை முலாம் பூசிய கலகலப்பான வணிகப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்க தமிழ் ரசிகர்கள் தவறுவதில்லை. இப்போது அப்படிப்பட்ட படங்கள் வராதது தான் ஒரு குறையாக உள்ளதே தவிர, அந்தப் படங்களுக்கான எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது. இதற்கு அண்மை உதாரணமாக அப்படிப்பட்ட வகையில் 'மத கஜ ராஜா' படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. அதுவும் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்துத் தாமதமாக வெளியான போதும் இந்த அளவுக்கு வெற்றியை அடைந்திருக்கிறது என்றால் அப்படிப்பட்ட கலகலப்பான படங்களுக்கான எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது என்பதுத...
ரசிகர்களின் ஆதரவு அலையில் யுவன் சங்கர் ராஜாவின் ‘ஸ்வீட் ஹார்ட்’

ரசிகர்களின் ஆதரவு அலையில் யுவன் சங்கர் ராஜாவின் ‘ஸ்வீட் ஹார்ட்’

News
ரசிகர்களின் ஆதரவு அலையில் யுவன் சங்கர் ராஜாவின் 'ஸ்வீட் ஹார்ட்' *'ஸ்வீட் ஹார்ட்' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த யுவன் சங்கர் ராஜா* ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரியோ ராஜ் - கோபிகா ரமேஷ் நடிப்பில், இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் வெளியான ' ஸ்வீட் ஹார்ட்' திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 14 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும், 'படம் நன்றாக இருக்கிறது' என்ற பாசிட்டிவான விசயத்தை மவுத் ஆஃப் டாக்காக பகிர்ந்து வருகிறார்கள். இதனால் ரசிகர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தத் தருணத்தில் இசை பணிக்காக வெளிநாட்டில் இருக்கும் படத்தின் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா படக் குழுவினருக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம், 'ஸ்வீட் ஹார்ட் படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள செய்து, வெற்றி பெற வைத்ததற்காக வாழ்த்துக்களை தெரிவித்திருக்க...
மீண்டும் ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ்!

மீண்டும் ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ்!

News
'ஹரா' படத்தின் மூலம் மோகனை மீண்டும் ரசிகர்களுக்கு வழங்கிய விஜய்ஶ்ரீ ஜி, 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷை புதிய படத்தின் மூலம் மறு அறிமுகம் செய்கிறார் *மலேசியாவை சேர்ந்த ஜி வி இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் மலேசிய ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் டத்தோ கணேஷ், அனித்ரா நாயர், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்* வித்தியாசமான கதைக்களங்களையும், சவாலான பாத்திரங்களையும் படைத்து அவற்றில் எதிர்பாராத நடிகர்களை நடிக்க வைப்பதில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி, 'தாதா 87' திரைப்படத்தில் சாருஹாசனையும், 'பவுடர்' படத்தில் நிகில் முருகனையும், 'ஹரா' படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் மோகனையும் நடிக்க வைத்தார். தற்போது இன்னுமொரு முற்றிலும் மாறுபட்ட முயற்சியாக 'பன்னீர் புஷ்பங்கள்' மூலம் 80களில் ரசிகர்கள் இதயங்களில் இடம் பிடித்த சுரேஷை தனது புதிய படத்தின் மூலம் மற...
விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ( ACE ) ‘படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ( ACE ) ‘படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

News, Reviews
மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ் ( ACE ) 'படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு! 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'உருகுது உருகுது' எனும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி .எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ஏ. கே. முத்து கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்...
CLOSE
CLOSE