Thursday, October 29

News

பவன் கல்யாணுடன் இணையும் ஸ்ருதி ஹாசன் .

பவன் கல்யாணுடன் இணையும் ஸ்ருதி ஹாசன் .

News
தமிழில்  அஜித் குமார் மற்றும் தமன்னா நடிப்பில் சிவா இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற 'வீரம்' தற்போது கட்டமா ராயுடு என்ற பெயரில் தெலுங்கில் தயாராவது தெரிந்ததே. இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு இணையாக சுருதி ஹாசன் நடித்து வருகிறார். பெரும் வெற்றி  பெற்ற  கப்பார் சிங் படத்தை தொடர்ந்து இந்த ஜோடியின் இரண்டாம் படம் இது.துரித வேகத்தில் படமாக்க பட்ட இந்தப் படம் இப்பொழுது முடியும் தருவாயில் உள்ளது.பொள்ளாச்சியை தொடர்ந்து இப்பொழுது ஹைதராபாதில் படப்பிடிப்பு  தொடர்ந்து நடை பெற்று வருகிறது. பவன் கல்யாணுடன் ஸ்ருதி ஹாசன் நடித்த பாடல் காட்சி பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்த போது  ஆரவாரம் ஒரு தமிழ் படத்துக்கு இணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வருகின்ற தெலுங்கு வருட பிறப்பு அன்று வெளி இடப படும் இந்தப் படம்  ஸ்ருதி  ஹாசனை தென்னிந்திய திரை உலகில்  மேலும்  உச்சத்தில் உயர்த்தி செல்லும் என்று எதிர்ப்பார்க்க ப...
இரு மொழிகளில் திரிஷா நடிக்கும் 1818

இரு மொழிகளில் திரிஷா நடிக்கும் 1818

News
மைன்ட் டிராமா என்ற பட நிறுவனம் சார்பாக தயாராகும் படத்திற்கு “ 1818” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் சுமன், ராஜேந்திரபிரசாத், பிரமானந்தம், சூது கவ்வும் ரமேஷ் திலக், ராஜா ராணி படத்தில் நடித்த மீரா கோஷல் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு           -        ஓம்பிரகாஷ் இசை           -        எஸ்.எஸ்.தமன் பாடல்கள்   -        மதன்கார்க்கி எழுதி, இயக்கி, தயாரிப்பவர்   -        ரிதுன்சாகர் தயாரிப்பு  -  மைன்ட் டிராமா பட நிறுவனம். மும்பை தீவிரவாதிகளால் முற்றுகையிடப்பட்டு பலர் கொல்லப்பட்ட பரபரப்பான சம்பவங்களை கதைக் களமாக்கி விறு விறுப்பான படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் இயக்குனர் ரிதுன்சாகர்... படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக தயாராகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.  ...
இசை துறையில் சாதிக்க  ‘தாயம்’

இசை துறையில் சாதிக்க ‘தாயம்’

News
இந்திய திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரே அறையில் படமாக்கப்பட்டு, ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பை பெற்று வரும்  'தாயம்' திரைப்படம், விரைவில் திரைக்கு வர இருக்கின்றது. அறிமுக இயக்குநர் கண்ணன் ரங்கசாமி இயக்கி இருக்கும் 'தாயம்' படத்தை 'பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்' சார்பில் தயாரித்து இருக்கிறார் ஏ ஆர் எஸ் சுந்தர். திரு இணைத்தயாரிப்பு செய்திருக்கும் இந்த  'தாயம்' படத்திற்கு, பல குறும்படங்களுக்கு இசையமைத்த அறிமுக இசையமைப்பாளர்  சதீஷ் செல்வம் இசை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. "தாயம் படம் முழுவதும் ஒரே அறையில் படமாக்கப்பட்டிருப்பதால், அதற்கு இசை அமைப்பது என்பது சவாலாக இருந்தது. ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் படத்தின் பாணி மாறி கொண்டே இருக்கும் என்பதால்  பின்னணி இசையில் அதிக கவனம் தேவைப்பட்டது. இசை என்பதை தாண்டி படத்தோடு பயணிக்கும் ஒரு கதாபாத்திரமாகவே பின்னணி இசை இருக்கும் என்பதை நான...
ஸ்டண்ட் மாஸ்டரின் தன்னம்பிக்கைப் பேச்சு !

ஸ்டண்ட் மாஸ்டரின் தன்னம்பிக்கைப் பேச்சு !

News
ஆழ் மனத்தைத் தட்டி எழுப்புங்கள் எல்லாம் முடியும் என்று பிரபல திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டரும் தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) செயலாளருமான  ஜாக்குவார் தங்கம் ஒரு விழாவில் பேசினார். திரைப்படங்களில் ஸ்டண்ட் அமைத்து அதிரடி பிம்பமுள்ள அவர் ஆன்மிகம் , தன்னம்பிக்கை பற்றிப் பேசியது வந்திருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது பற்றிய விவரம் வருமாறு: குறும்பட இயக்குநரும் எழுத்தாளருமான ஜி.எஸ்.குமாரதேவி எழுதிய 'காற்றடைத்த பையடா' நூல் வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 31 அன்று  காலை பிரசாத் லேப் 70 எம்எம் திரையரங்கில் நடைபெற்றது.. ஜாக்குவார் தங்கம் நூலை வெளியிட்டார். வனிதா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலை இளைஞர்கள் பலரும்  பெற்றுக் கொண்டனர். நூலை வெளியிட்டு  அவர் பேசும் போது "நான் இந்த நாவலை வாசித்தேன் .அதில் கெட்டவை எதுவும் இல்லை . நேர்மை. புதுமை, உண்மை. இருக்கிறது. இதற்காகவே  அவரைப் பாராட்டுகிறேன். சகோதரி ...
லாரன்ஸின் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில்

லாரன்ஸின் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில்

News
நடிகரும், இயக்குனருமான ராகவாலாரன்ஸ் அம்பத்தூரில் ஸ்ரீராகவேந்திரர் கோவில் கட்டி பராமரித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம்.. பொதுமக்களிடையே  அந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. வருகிற ஜனவரி 1ம் தேதி புத்தாண்டன்று கோவில் கட்டி 8 ஆண்டுகள்  ஆகிறது. புத்தாண்டன்று லாரன்ஸ் தனது டிரஸ்ட் குழந்தைகளுடன் புத்தாண்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் கொண்டாட இருக்கிறார். கோவிலில் சிறப்பு, யாக பூஜைகள் நடைபெற உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்க உள்ளார் ராகவா லாரன்ஸ்....
ரஜினிகாந்த் வெளியிட்ட ‘தரமணி’  பாடல்கள்

ரஜினிகாந்த் வெளியிட்ட ‘தரமணி’ பாடல்கள்

News
  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'தரமணி' பாடல்களை, மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்தனர் இயக்குநர் ராமும், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும். ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் சார்பில் ஜே சதீஷ் குமார் தயாரித்து, ராம் இயக்கி இருக்கும் திரைப்படம் 'தரமணி'. மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக, ‘From the Bottom of Our Hearts’ என்னும் காணொளியை உருவாக்கி, அதை யூ டூபில் 'தரமணி' படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். வெளியான சிறிது நேரத்திலேயே, இந்த காணொளி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவ ஆரம்பித்து விட்டது. யுவன்ஷங்கர் ராஜாவின் நெஞ்சை வருடும் இசையில் உருவாகி இருக்கும்  'தரமணி' பாடல்களை டிசம்பர் 30 ஆம் தேதி அன்று வெளியிட்டார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இயக்குநர் ராம் கூறியதாவது: "தரமணி படத்தின் பாடல்களை  ரஜினி சார் வெளியிட்டிருப்பது...
நகை பறிப்பை மையமாக கொண்ட  ‘டியூக் டேவிட்’ குறும்படம்

நகை பறிப்பை மையமாக கொண்ட ‘டியூக் டேவிட்’ குறும்படம்

News
இன்றைய காலக்கட்டத்தில், பெண்கள் தனியாக நடந்து செல்ல அஞ்சுகிறார்கள். அதற்கு காரணம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் நகை பறிப்பு தான். அத்தகைய குற்ற செயலை மையமாக கொண்டு தற்போது உருவாகி  இருக்கிறது,  'பெஞ்ச் பிளிக்ஸ்' வழங்கி இருக்கும்  'டியூக் டேவிட்' குறும்படம். வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு சிறந்ததொரு அடித்தளமாக 'பெஞ்ச் பிளிக்க்ஸ்' நிறுவனம் விளங்குவது குறிப்பிடத்தக்கது. "பைசல், சர்கியூட், பாண்டி ஆகிய மூவரும், இருசக்கர வாகனங்களில் சென்று நகை பறிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள். இந்த கும்பலுக்கு தலைவன்  'டியூக் டேவிட்' . எங்கு, எப்படி நகை பறிக்க வேண்டும் என்பதை தெளிவாக திட்டம் போட்டு  அதை செயல்படுத்துவது தான் இந்த மூவரின் வேலை. ஆனால் இவர்கள் பறித்து வரும் நகைகள் அனைத்தும் 'டியூக் டேவிட்டின் கட்டுப்பாட்டில், நவீன தொழில் நுட்ப பாதுகாப்போடு  தான் இருக்கும்.  ஒரு நாள், டேவிட் ரகசிய இடத்தில  ப...

விஜய் ஆண்டனியின் அடுத்த படம்

News
வர்த்தக ரீதியாக மட்டுமின்றி விமர்சகர்கள் கூட  பாராட்டும் படி தொடர்ந்து வெற்றி படங்கள் வழங்கும் விஜய் ஆண்டனி, தற்போது தயாரிப்பில்  உள்ள எமன் படத்தை தொடர்ந்து தந்து அடுத்த படமாக ஐ pictures  என்னும் நிறுவனத்தின் சார்பில் எஸ் சரத் குமார் மற்றும் ராதிகா சரத் குமார் தயாரிக்கும் ஒரு பிரம்மாண்டமான படத்தில் நடிக்க உள்ளார். புதிய இயக்குனர்  சீனு வாசன் இயக்கத்தில் உருவாக உள்ள பெயரிடப் படாத  இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு  ஆகிய இரண்டு  மொழிகளில் தயாராவது  குறிப்பிட தக்கது .பிச்சைக்காரன் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து  சமீபத்தில் வெளி ஆன சைத்தான் திரை படமும் பெரிய வெற்றி அடைய , அதன் தொடர்ச்சியாக  பல் வேறு தயாரிப்பு நிறுவனங்கள்  விஜய்  ஆண்டனியுடன்  இணைந்து பணியாற்ற முயற்சிகள் மேற் கொண்டனர். ஆனால் விஜய் ஆண்டனியோ யாரும் எதிர்பாராத வண்ணம் ராதிகா சரத்குமார் தம்பதியினருக்கு படம் செய்ய சம்மத...
சர்வேதச திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‘லக்ஷ்மி’ குறும்படம்

சர்வேதச திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‘லக்ஷ்மி’ குறும்படம்

News
இயக்குநர் கே எம் சர்ஜுன் இயக்கத்தில், 'பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்' ஐ பி கார்த்திகேயன் தயாரித்து இருக்கும் குறும்படம் - 'லக்ஷ்மி'. தினசரி வாழ்க்கையில் அனைவரும் சந்திக்கும் ஒரு சராசரி பெண்ணின் வாழக்கையை மையமாக கொண்டு நகரும் 'லக்ஷ்மி' குறும்படத்தில், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கணவன், மகன் என குடுமபத்திற்காக ஓயாமல் ஓடி கொண்டிருக்கும் ஒரு சராசரி பெண்ணுக்கு, சராசரியாக தன் கணவனிடத்தில் இருந்து கிடைக்கும் காதல், பாசம், அன்பு என  இவை எதுவும் கிடைக்காமல் போகிறது.  வாழ்க்கையே  வெறுத்து போகும்  அந்த சூழ்நிலையில், லக்ஷ்மியின் மனம் காதலை தேடுகிறது. அவளது மனம் சொல்லும் பாணியில் லக்ஷ்மி பயணிக்கிறாளா? அல்லது சமூதாயம் காட்டும்  பாதையில் பயணிக்கிறாளா? என்பது தான் இயக்குநர் சர்ஜுன் இயக்கி இருக்கும்  லக்ஷ்மி குறும்படத்தின் கதை. "லக்ஷ்மி குறும்படத்தை இயக்கும் போது, ...

ஜல்லிக்கட்டு பற்றி நடிகர் எஸ்.டி.ஆர்.

News
தன் மனதில் பட்டதை எதிர்விளைவுகள் பற்றி கவலைப்படாமல் கருத்து தெரிவிக்கும் நடிகர் எஸ்.டி.ஆர். சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் தனது கருத்தை பதிவு செய்பவர். தற்போது, தமிழர்களின் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஜல்லிக்கட்டு பற்றிய தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறார். அதன் விவரம்: "ஜல்லிக்கட்டு தமிழனின் கலாச்சார அடையாளம். இந்த வீர விளையாட்டு நமது வாழ்வில் ஒருங்கிணைந்து பயணித்து வந்துள்ளது. எதோ சில தனிப்பட்ட நபர்களும், சில தன்னார்வ அமைப்புகளும் தங்களுடைய விலாச தேவைக்காக   அதிகாரத்தில் இருப்போரையும், நீதித் துறையையும் தவறான தகவல்கள் மூலம் வழி நடத்தி நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை நடத்த விடாமல் செய்கின்றனர். அரசும், நீதித் துறையும் கடினமாக, கண்டிப்பாக நடந்துகொள்ள பல்வேறு கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினைகள் இருக்கும்போது, ஜல்லிக்கட்டை தடை செய்வதுதான் முக்கியகடமை என்று மல்லுக் கட்டுவது ...