Photos
சின்ன பட்ஜெட் படங்களை வெளியிட உதவும் ஸ்ரீனிக் ப்ரடக்ஷன்!
ரிலீஸாக முடியாமல் தேங்கி கிடக்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு கதவை திறந்துவிடும் ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ்!
*ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக மாறும் ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ்*
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் 2௦௦ படங்களாவது வெளியாகி வருகின்றன. இவற்றில் சுமார் 15௦ படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள் தான்.. ஆனாலும் சமீப வருடங்களில் படம் முடிவடைந்தும் கூட, பல்வேறு பிரச்சனைகளால் ரிலீஸ் செய்ய முடியாமல் நிறைய சின்ன பட்ஜெட் படங்கள் தேங்கி கிடக்கின்றன. தற்போது இதுபோன்று சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கும் நல்ல படங்களுக்கு வாசலை திறந்துவிடும் விதமாக ஒரு விடிவெள்ளியாக மாறி ஒரு புதிய முயற்சியை ஆரம்பித்துள்ளது ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ் (SRiNIK PRODUTIONS) நிறுவனம்.
ஸ்ரீனிக் புரொடெக்ஷன்ஸ் சதீஷ்குமார் மற்றும் பாலசுப்ரமணியம் இருவரும...









