Uncategorized
தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா!
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழாபிரசாத் லேபில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ். ஏ.சந்திரசேகர் ,இயக்குநர் மிஸ்கின், இயக்குனர் பேரரசு நடிகர்கள் விமல், மற்றும் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. செயலாளர் ஆபிரகாம் வரவேற்புரை வழங்கினார்.. பின்னர் இயக்குநர் பேரரசு பேசுகையில்,
திருப்பாச்சி, சிவகாசி துவங்கி பல நினைவுகளை பகிர்ந்து கொண்டவர் . மிஸ்கின் குறித்து பேசுகையில் உங்கள் படம் எடுக்கும் முறை வேறு எங்களுடைய முறை வேறு 'நீங்கள் எதார்த்தம் நாங்கள் பதார்த்தம்' என எதுகை மோனையோடு பேசியவர் சிவகாசி வெளியான தீபாவளியன்று எப்படிப்பட்ட மகிழ்ச்சியை அனுபவித்தாரோ அதே மகிழ்ச்சியை இப்போது இந்த நிகழ்வில் கலந்துகொண்டதில் அனுபவிக்கி...
யோகி பாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படப்பிடிப்பு துவக்கம்*
அன்கா புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பில் யோகிபாபு, ஓவியா நடிப்பில் உருவாகும் 'கான்ட்ராக்டர் நேசமணி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
நடிகர் யோகிபாபுவும், நடிகை ஓவியாவும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகிவந்த நிலையில், அந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது..
யோகிபாபு, ஓவியா கூட்டணியில் தயாராகும் படத்திற்கு 'கான்ட்ராக்டர் நேசமணி' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அத்துடன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
கான்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரம் வடிவேலு நடித்ததால் பிரபலமானது. அதேவேளையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டரில் இந்தப் பெயர் அடிபட, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு உலகளவில் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ ட்ரெண்டானது. அந்த சமயத்திலேயே, கான்ட்ராக்டர...
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தில் இடம்பெற்ற ‘லல்லாரியோ..’ பாடலின் வீடியோ, அமேசன் பிரைமில் வெளியீடு.*
*இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' படத்தில் இடம்பெற்ற 'லல்லாரியோ..' பாடலின் வீடியோ, அமேசன் பிரைமில் வெளியீடு.*
நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்'. இந்தப்படத்திற்காக இசையமைப்பாளர் கிரிஷ் இசையில் பாடலாசிரியர் வே. மதன்குமார் எழுதிய 'லல்லாரியோ லல்லாரியோ...' எனத் தொடங்கும் பாடலை பின்னணி பாடகர் வேல்முருகன் பாடியிருக்கிறார். இந்த பாடலின் வீடியோவை அமேசான் பிரைம் வீடியோ இன்று வெளியிட்டிருக்கிறது. இந்த பாடலில் படத்தில் இடம்பெற்ற இரண்டு முன்னணி கதாபாத்திரங்களுக்கு இடையேயான சகோதரத்துவ உறவு அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதற்கான காணொளிகளில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது.
2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் நடிகர்...
சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் இணையும் கார்த்தி – முத்தையா வெற்றி கூட்டணி!
நடிகர் சூர்யாவின் 2D Entertainment தொடர்ந்து வித்தியாசமான களங்களில், சிறந்த கதைகளை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. ‘சூரரைப்போற்று’, ‘கடைக்குட்டிசிங்கம்’, ‘பொன்மகள்வந்தாள்’ போன்ற படங்களை விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடும் ப்ளாக் பஸ்டர் வெற்றி படங்களாக தந்து வருகிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரும் அங்கீகாரத்தையும் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. இதையடுத்து
2D Entertainment நிறுவனம் பெருமை மிகு படைப்பாக “விருமன்” என்று தலைப்பிடப்பட்ட பிரமாண்ட புதிய படத்தை தயாரிக்கிறது. இதில் அதிக வசூல் சாதனை படைத்த கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து
சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி மீண்டும் இணைகிறார்.
நடிகர் கார்த்தி திரைவாழ்வில் ‘பருத்திவீரன்’ திரைப்படத்திற்கு பிறகு கிராமத்து இளைஞனாக, அவரை தமிழகம் முழுக்க கொண்டாட ...
இந்திய பொழுபோக்கு துறையில் ஒரு மைல்கல் BTC ஓடிடி செயலி!
Black Ticket Cinema மற்றும் Hangover tech Pvt ltd. இணைந்து உருவாக்கிய BTC எனும் ஓடிடி செயலியுடைய பயன்பாட்டின் வெளியீட்டு தேதியை அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறது. தற்பெருமையாக இல்லாமல், உண்மையிலயே இந்த செயலி, இந்திய பொழுபோக்கு துறையில் ஒரு மைல்கல்லாக அமையும் என நாங்கள் நம்புகிறோம். மொபைல் அடிப்படையிலான பொழுதுபோக்கு அம்சங்கள் மக்களிடையே அதிகரித்து வரும் வேளையில், மக்கள் விரும்பும் இடத்தில் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். இந்த செயலி பார்வையாளர்கள் மற்றும் படைப்பாளர்கள் இருவரையும் மகிழ்விக்கும் நோக்கோடு செயல்படும்
பார்வையாளர்களுக்கு இச்செயலியில் என்ன உள்ளது ?
- இது மாத சந்தா கட்டும்படியான செயலி அல்ல . நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதற்கு மட்டும் பணம் செலுத்தி, அந்த படைப்பை மட்டும் பார்க்கலாம்.
- உலகில் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம்....




