கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்…!

0

 38 total views,  1 views today

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்…!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தற்போது புராணம் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கருப்பொருள்களை கொண்ட தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, தற்போது அதன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் நிகழ்ச்சியை டிசம்பர் 4 முதல் மீண்டும் ஒளிபரப்ப உள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்.
கலர்ஸ் மற்றும் ஸ்வஸ்திக் புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த நிகழ்ச்சியைத் தயாரித்துள்ளது. சித்தார்த் குமார் திவாரி இயக்கத்தில், சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் தொடரில் சூர்யதேவரா சலில் அங்கோலாவும், விஷ்ணுவாக திவாகர் புந்திரும், சிவனாக தருண் கன்னாவும், இளம் சனீஸ்வரனாக கார்த்திகேயா மாளவியாவும், அவரது தாயாக ஜூஹி பார்மரும் நடித்துள்ளனர்.
சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரனின் தயாரிப்பு வடிவமைப்பு அமித் சிங்கால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 600 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் முயற்சியும் இதில் அடங்கும். இந்தத் தொடருக்கான செட் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, அதில் ஒரு செட், சனீஸ்வரன் வளரும் காடு போன்று வடிவமைத்து போடப்பட்டுள்ளது. இந்த செட் 25,000 சதுர அடி பரப்பளவில் மிக பிரமாண்டமாக போடப்பட்டுள்ளது. இரத்த சிவப்பு வண்ண செட்டால் அசுரர்களின் உலகம் அமைக்கப்பட்டு உள்ளது. அசுரர்களுக்கான ஆடம்பரமான ஆடைகள் ஸ்வேதா கோர்டேவால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் மிகவும் சக்திவாய்ந்த கடவுள். ஆனால் அதே நேரத்தில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தெய்வத்தின் வடிவம் ஆவார். சனீஸ்வரன் பிறந்தவுடன் அவரது தந்தை சூர்யதேவரின் கைகளில் அநீதியை எதிர்கொள்கிறார். சனீஸ்வரனின் வாழ்க்கையை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சியாக இது இருக்கும். தேவர்கள் மற்றும் அசுர உலகங்களுக்கு இடையே ஒரு நுட்பமான சமநிலையை பேணுவதன் மூலம் அவர் நீதியின் இறுதி வழிகாட்டலாக மாறுவதற்கு இது வழிவகுக்கிறது. சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் என்னும் பிரம்மாண்டமான கருப்பொருள்களுடன் கூடிய பிரம்மாண்டமான கதைத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும்.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான நிலையற்ற உறவு, ஆதிக்கத்திற்கான இறுதிப் போரான ‘தேவஅசுர சங்க்ரமு’-க்கு வழிவகுத்த ஒரு சகாப்தத்துக்கு இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை அழைத்துச் செல்லும்.
போர் கடுமையாக மாறும்போது, சிவபெருமான் தலையிட்டு, நன்மைக்கும் தீமைக்கும் இடையே சமநிலையை பராமரிக்கும் ஒரு புதிய ஆற்றலுக்கு திரித்துவம் (ஒன்றில் மூன்று ஐக்கியம்) வழி செய்கிறது என்று அறிவிக்கிறார். இதனால் சனீஸ்வரன் பிறக்கிறார்.
சூர்யதேவருக்கும் அவரது மனைவி சாயாதேவிக்கும் (சூர்யதேவரின் மனைவி சந்தியாவின் நிழல் மூலம் உருவானர் சாயாதேவி) பிறந்தவர் சனீஸ்வரன். அதாவது ஒளிக் கடவுளான சூர்ய தேவர் மற்றும் சாயா, அவரது மனைவி சந்தியாவின் நிழலுக்குப் பிறந்த குழந்தைதான் சனீஸ்வரன்.
ஆனால் சனி பிறப்பிலேயே தூற்றப்படுகிறார். ஒரு காட்டில் சாயாவால் வளர்க்கப்பட சூர்யலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சனி, கர்மாவின் பாதையில் தனது பயணத்தைத் தொடங்குகிறார். அவர் வயதாகும்போது, அவர் கடினமான சூழ்நிலைகளில் கூட தயங்காமல் தொடர்ந்து சரியான நீதியை வழங்குகிறார். அவர் உயர்ந்த உண்மைக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறார். பாரபட்சமின்றி நீதி வழங்க பந்த பாசங்களைத் துறக்க வேண்டும் என்பதால் சனி தன் பெற்றோரைப் பிரிந்து சென்று சனிலோகத்தில் வாழத் தொடங்கினார்.
சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் தொடரை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு கலர்ஸ் தமிழிலும், ஜியோசினிமாவில் டிஜிட்டலிலும் காணலாம்.

Share.

Comments are closed.