![]()

கூல் சுரேஷ் என்ற கோமாளி!
தலையில் குல்லாய போட்டு அமர்ந்திருக்கும் இந்த நபரின் பெயர் தான் கூல் சுரேஷ். திரைப்பட விழாக்களுக்கு அழையாத விருந்தாளியாக ஆஜராகி, படத்திற்கு விளம்பரம் தேடித் தருகிறேன் என்று சொல்லி மேடை ஏறுவார்.
“நான் மேடைப் பேச்சாளர் அல்ல எனவே எனக்கு நீங்களாகவே ஒரு முறை கைதட்டி விடுங்கள்… ” என்று பேச ஆரம்பிப்பார்.
அவ்வளவுதான் அவரது அட்ராசிட்டி ஆரம்பமாகிவிடும். நேற்று மாலை பிரசாத் லேபில் நடந்த மன்சூர் அலிகானின் சரக்கு பட முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கூல் சுரேஷ் வழக்கம்போல் தன் அட்ரசிட்டியைஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்க, திடீரென யாரும் சற்று எதிர்பாராமல் கையில் கொண்டு வந்த மாலையை தொகுப்பாளினி பெண் மீது கழுத்தில் போட்டு விட்டார். பார்வையாளர்களிடம் அதிர்ச்சியும் சலசலப்பும் ஏற்பட்டது.
முன்னர் ஒரு விழாவில் கெட்ட வார்த்தையாக பொருள்படும் வகையில் தக்காளி தக்காளி என்று திரும்பத் திரும்ப மேடையில் பேசிக் கொண்டிருந்தார் இதைக் கண்டு கோபமற்ற பத்திரிகையாளர் ஒருவர் “நாகரீகமாக முதலில் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்…” என்று வன்மையாக கண்டித்ததும் மன்னிப்பு கேட்டுவிட்டு கீழே இறங்கினார்.
சமீபத்தில் திரைக்கு வந்த சந்தானத்தின் ‘கிக்’திரைப்பட விழாவின்போது சந்தானம் இவரை வைத்துக் கொண்டு பேசினார்… “எல்லா படத்துக்கும் விளம்பரம் தரேன்னு சொல்லி கூல் சுரேஷ் மேடை ஏறுவான் ஆனா இவனுக்கு தான் கடைசில பாத்தால் இவனுக்குத்தான் விளம்பரம் தேடிட்டு இருப்பான்…” என்று கூல் சுரேஷ் முகத்திரையை விளையாட்டுபோல் கிழித்தெறிந்தார். விழா முடிந்ததும் இறுதியில் மன்சூரலிகான் மேடையிலேயே தொகுப்பாளனியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க சொல்லி கூல் சுரேஷ் வற்புறுத்த ஒரு மாதிரி விழா நிறைவு பெற்றது




