மிஷ்கினின் திரையரங்க விஜயம்!

0

 51 total views,  1 views today

இயக்குநர் மிஷ்கின் சினிமா மீது கொண்டிருக்கும் அளவில்லாத காதல், சினிமா மீதான பெரும் வேட்கை மற்றும் மரியாதை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பல பொதுவிடங்களில் அவரது பேச்சு மற்றும் கருத்துக்கள் சினிமா மீது அவர் கொண்டிருக்கும் உண்மையான காதலை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். இயக்குநர் மிஷ்கின் தனது படத்திற்காக திண்டுக்கல் மாநகர் பகுதியில் லொகேஷன் பார்க்க சென்ற இடத்தில், பல வருடங்களுக்கு முன்னர் தன் சிறு வயதில் தனது தந்தையுடன் சென்று திரைப்படங்கள் பார்த்த திரையரங்கை சென்று பார்வையிட்டுள்ளார். அங்கிருந்த வயதான தியேட்டர் முதலாளி இயக்குநர் மிஷ்கினை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஆன போதிலும் அவர், தியேட்டரை பார்வையிட வந்ததை கேட்டு மகிழ்ந்து, மரியாதை நிமித்தமாக தியேட்டரை சுற்றி காட்டியதுடன், சில காட்சிகளை தியேட்டரில் திரையிட்டு காட்டினார். சிறு வயதில் கண்ட அதே உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் அக்காட்சிகளை கண்டு மகிழ்ந்தார் மிஷ்கின். தியேட்டர் முதலாளியின் மகன்களால் அவர் அடையாளம் கண்டுக்கொள்ளப்பட்டு அவர் வந்ததில் பெருமையடைந்து அவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஆனால் இந்த நேரத்தில் அந்த தியேட்டர் இன்னும் சில காலங்களில் இடிக்கப்படவுள்ள செய்தி கேட்டு மனம் வருந்தினார் மிஷ்கின். பிரபலங்கள் களத்தில் இறங்கி திரையரங்குகளை பார்வையிட்டு திரையரங்குகளுக்கு ரசிகர்களை கூட்டி வர வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்த கடினமான காலத்தில் திரைப்படங்களுக்கு செய்யும் மிகப்பெரும் மரியாதையாக, பிரபலங்கள் ஒன்று சேர்ந்து திரையரங்குகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். அது ஒன்றே இப்போதைய அவசிய தேவை என்று அவர் நம்புகிறார்.

 

Share.

Comments are closed.