மனம் வருடும் காதல் கதை “என்ன சொல்ல போகிறாய்”!

0

 275 total views,  1 views today

“என்ன சொல்ல போகிறாய்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

Trident Arts நிறுவன தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் நாயகனாக நடிக்கும், A.ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், “என்ன சொல்ல போகிறாய்”. இன்றைய தலைமுறை இளைஞர்களை அசத்த, மனம் வருடும் காதல் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், ரசிகர்களின் கோலாகல கொண்டாட்டத்துடன் நடைபெற்றது.

முதலில் படத்தின் பாடல்களை கலைகுழுவினர் மேடையில் ரசிகர்கள் ஆராவாரத்துடன் அரங்கேற்றினர். இதனை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில்

Trident Arts நிறுவன தயாரிப்பாளர் R.ரவீந்திரன் பேசியதாவது…
இந்தப்படம் பத்தி கலைஞர்கள் தான் பேசனும் . 500 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ளேன். நிறைய படங்கள் தயாரித்துள்ளேன். இந்தப்படம் என்னுடைய கேரியரில் முக்கியமான படம். முழுக்க புதுமுகங்களை இந்தப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறேன். படக்குழுவிலேயே நான் தான் வயதானவன். படம் இளைஞர்கள் கொண்டாடும் படமாக வந்திருக்கிறது, படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

படத்தொகுப்பாளர் மதி பேசியதாவது…
என்னை நம்பி இந்தப்படத்தை தந்ததற்கு நன்றி. ஹரி என் நண்பன், பல வருடங்களாக அவரை தெரியும். இந்தக்கதை முன்பே தெரியும், எப்போது படமாக வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். படம் நன்றாக வந்திருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் பேசியதாவது…
நம்ம அம்மா வீட்டில் சமைக்கும் போது ஒவ்வொரு நாளும் ஒரு எமோஷனோடு சமைப்பாங்க, ஆனா பையனோட பிறந்த நாளைக்கு ஸ்பெஷலா சமைப்பாங்க. அந்த மாதிரி நான் சமைச்ச படம் தான் என்ன சொல்ல போகிறாய். இந்த படம் என் வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்கும், படம் நன்றாக வந்திருக்கிறது. எல்லோருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் விவேக் மற்றும் மெர்வின் பேசியதாவது…,
என்ன சொல்ல போகிறாய், 8 பேரோட அறிமுக படம் எல்லோருக்கும் வாழ்க்கை தரப்போகிற படம், இவர்கள் எல்லோரும் பெரிய அளவில் ஜெயிக்க வேண்டும் அனைவரும் 100 படங்கள் செய்ய வேண்டும் அதில் நாங்களும் இருக்க வேண்டும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு தந்துள்ளீர்கள் படத்திற்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

Music 24/7 ஜமீர் பேசியதாவது..,
இந்த மாதிரி படத்தை எடுத்த ரவி சாருக்கு வாழ்த்துக்கள் இதை இயக்கிய ஹரிக்கு வாழ்த்துக்கள். அஷ்வின் இன்னும் பெரிய உயரத்திற்கு செல்வார். இந்த மாதிரி படத்திற்கு இசையை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் பிரபு சாலமன் பேசியதாவது…
இந்தப்படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள், அஷ்வின் என்னிடம் படத்தின் ஒரு சின்ன விஷுவலை காட்டினார். இயக்குநர் ஹரிஹரன் அதிலேயே மிகச்சிறப்பாக செய்திருந்தார். விவேக்,மெர்வின் இசை அசத்தலாக இருந்தது ஒரு காதல் படத்திற்கு இசை மிக முக்கியம். அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அஷ்வின் எனது மகனாக மாறிவிட்டார். அவருக்கு நிறைய மெச்சூரிட்டி இருக்கிறது அவர் தனது படங்களை மிக கவனமுடன் தேர்வு செய்து, அதற்காக உழைக்கிறார். அவர் பெரிய இடத்திற்கு செல்வார். தயாரிப்பாளர் ரவி மிக அழகாக ஒரு குழுவை ஒருங்கினைத்து படத்தை செய்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் தம்பி ராமையா பேசியதாவது…
இன்றைய இளைஞர்களை வசீகரிக்கிறார் அஷ்வின், நிகழ்கால விஸ்வநாதன் ராமமூர்த்தியாக இருக்கும் விவேக் மெர்வின் இதேபோல் என்றும் பிரியாமல் தமிழ் சினிமா இசையில் பெரும் புகழ் பெற வேண்டும். கதை அறிவு கொண்ட ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட், இயக்குநர் ஹரிஹரன் கனவை திரையில் கொண்டுவந்திருக்கிறார். ரவீந்திரன் நயாகன் அஷ்வினை பெரிய இடத்திற்கு செல்வார் அதை உணர்ந்து தான், அஷ்வின் அவரை முழுதாக ஒப்புக்கொடுத்துள்ளார். புகழ் நல்ல பிள்ளை. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் நன்றி.

சாண்டி மாஸ்டர் பேசியதாவது…
நாயகன் அஷ்வின் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். இயக்குநர் ஹரிஹரனின் உழைப்பில் டிரெய்லர் பார்க்கும்போதே செம அழகாக இருக்கிறது. படத்தை அழகாக செய்துள்ளார். செல்லக்குட்டி புகழ் அஷ்வின் இருவரும் இதில் இணைந்து கலக்கியுள்ளார்கள். தேஜு உடன் இணைந்து வேலை செய்திருக்கிறேன் நல்ல டான்ஸர். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அந்த விழாவில் நான் டான்ஸ் ஆடுகிறேன் நன்றி.

இயக்குநர் உதயகுமார் பேசியதாவது..,
என் சகோதரரின் மகன் அஷ்வின். ரொம்ப பெருமையாக இருக்கிறது. என்ன சொல்ல போகிறாய் டைட்டிலே அழகாக இருக்கிறது. இசையமைப்பாளர்கள் நடத்திய இசை நிகழ்ச்சி என்னையும் குதூகலம் கொள்ள வைத்தது. இயக்குநர் பிரபு சாலமன் அஷ்வினை வைத்து அடுத்த படம் செய்கிறார். வாழ்த்துக்கள். இந்தப்படம் பிரச்சனைகள் இல்லாத படமாக இருக்கிறது. இப்போதெல்லாம் காலண்டர் காட்டிவிட்டீர்கள் என பிரச்சனைகள் பண்ணுகிறார்கள். இயக்குநர் படம் எடுப்பதே பெரும் பிரச்சனையாக இருக்கும்போது இதையெல்லாம் சந்திக்க வேண்டி இருக்கிறது. காதல் மட்டும் தான் உலகத்தில் பிரச்சனை இல்லாத ஜாதி. அதை இந்தப்படம் சொல்வது மகிழ்ச்சி. அஷ்வினுக்கு நான் எந்த உதவியும் வழிகாட்டலும் செய்யவில்லை. ஆனால் இந்தமேடையில் அவனை வளர்த்துவிட்ட விஜய் டீவிக்கும், தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். அஷ்வினுக்கு மிகப்பெரிய ரசிகைகள் கூட்டம் பெருகியிருக்கிறது. இந்த திரைப்படத்தை அனைவரும் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

நாயகி அவந்திகா பேசியதாவது…
இந்தப்பயணம் என் மனதுக்கு நெருக்கமானது. நடிகையாக வரவேண்டும் என்பது எனது கனவு. அது இப்போது சாத்தியமாகியிருக்கிறது. இப்படத்தில் வேலை செய்தது மறக்க முடியாத அனுபவம். அஷ்வின் எனக்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்தார். பாடல்கள் நன்றாக வந்துள்ளது. படமும் உங்களுக்கு பிடிக்கும் எல்லோருக்கும் நன்றி

நாயகி தேஜஸ்வினி பேசியதாவது…
அஷ்வின் பீப்பிள்ஸ் லவ் என டிவிட் செய்வதன் அர்த்தம் இப்போது தான் அர்த்தம் தெரிகிறது. எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. ஹரிஹரன் ஒவ்வொரு விசயமும் சொல்லிக்கொடுத்து செய்ய வைத்தார். படம் நன்றாக வந்திருக்கிறது. இந்தப்படக்குழுவே மிக கடுமையாக உழைத்திருக்கிறது. முதன் முதலாக பெரிய படம் செய்திருக்கிறோம் உங்கள் ஆதரவு தேவை நன்றி.

நடிகர் புகழ் பேசியதாவது…
உயரத்துக்கு ஏணியா இருக்கும் என்னோட பேன்ஸுக்கு நன்றி. ரவி சார் ஆபீஸ் கூப்பிட்டு செக் கொடுத்து, படம் செய்கிறாய் என்று சொன்னார். அதற்கப்புறம் 5 மாதம் கூப்பிடவில்லை. அப்புறமாக அஷ்வின் நாயகன் என்றார்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இயக்குநர் இது என் 7 வருட உழைப்பு, தயவு செய்து காமெடி பண்ணி கெடுத்து விடாதீர்கள் என கெஞ்சி கேட்டார் அதனால் நான் எதுவும் காமெடி செய்யவில்லை. படத்தை செய்தது ஜாலியாக இருந்தது. இப்படத்தில் பாடல்கள் எல்லாமே பயங்கர ஹிட்டாகிவிட்டது படம் கண்டிப்பாக வெற்றி பெறும் அனைவருக்கும் நன்றி.

நாயகன் அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் பேசியதாவது…
இறைவனுக்கு நன்றி அப்புறம் உங்களுக்கு நன்றி. உங்கள் அன்பால் தான் இங்கு நிற்கிறேன். நீங்கள் தரும் அன்பு தான் என்னை வளர்த்துள்ளது. நான் கனவு கண்டிருக்கிறேன் ஆனால் இந்த இடத்திற்கு வருவேன் என்று நினைக்கவில்லை உங்கள் அன்பால் தான் இது சாத்தியமாகியிருக்கிறது. எனது முதல் படம் இன்று இசை விழா நடப்பது மகிழ்ச்சி. நானும் உங்கள் இடத்தில் இருந்து வந்திருக்கிறேன் என் இடத்தில் இருந்து பார்த்தால் தான் உங்கள் அன்பு புரியும். என்ன சொல்லப் போகிறாய் படத்திற்கு முன், பின் என என் வாழ்க்கையை பிரிக்கலாம். விஜய் டீவி என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் தந்திருக்கிறது, அவர்களுக்கு நன்றி. ஒரு காமெடி ஷோ இவ்வளவு பெரிய பிரபலம் தருமா என நினைத்து கூட பார்க்கவில்லை. உங்கள் அன்புக்கு ஏற்ற சரியான படம் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இப்போது இந்தப்படத்தின் மூலம் உங்களிடம் வந்திருக்கிறேன். உங்கள் வாழ்வில் நல்ல நண்பன் இருந்தால் உங்கள் வாழ்வு கண்டிப்பாக சிறப்பாக இருக்கும். ரவி சார் யாராயிருந்தாலும் அவர் ஆபீஸில் சாப்பாடு போடுவார் அவர் ஆபீஸில் நிறைய சாப்பிட்டிருக்கிறேன். நல்ல மனிதர் அவர், முதலில் அவர் சொன்ன கதையை செய்ய மாட்டேன் என சொல்லி விட்டேன். பெரிய நிறுவனத்தை மறுத்து விட்டோம் என வருத்தமாக இருந்தது. நீங்கள் என் மேல் அன்பு வைத்து என்னை பார்க்க வருகிறீர்கள் உங்களை ஏமாற்றக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். நான் கதை கேட்கும்போது நல்லாயில்லனா தூங்கி விடுவேன். 40 கதைக்கும் மேல் நான் தூங்கியிருக்கேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை என்ன சொல்ல போகிறாய் தான். ஹரிஹரன் அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் அட்டகாசமான இசையை தந்திருக்கிறார்கள். நாயகிகள் இருவருமே மிகுந்த நட்புடன் நடித்து தந்தார்கள். படம் பார்க்க பிரமாண்டமாக வந்திருக்கிறது. புகழ் இந்தப்படத்தில் அழகாக இருக்கிறார். எனக்கு சினிமாவில் ரெண்டு பேரை பிடிக்கும் சூப்பர் ஸ்டார். அப்புறம் சிம்பு சார். அவர் போன் செய்து என்னை வாழ்த்தினார் அவருக்கு நன்றி. சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய இன்ஷ்பிரேஷானாக இருந்திருக்கிறார். அவரை நினைத்து தான் என் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்திருக்கிறேன். என்ன சொல்லப் போகிறாய் படத்தை நீங்கள் பார்த்து கொண்டாடுவதை காண ஆவலாக இருக்கிறேன். இந்தப்படம் பல பேரின் கனவு கண்டிப்பாக ஜெயிக்கும் என நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் A.ஹரிஹரன் கூறியதாவது…
ஒரு விசயம் உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்த உலகமே இணைந்து செஞ்சு கொடுக்கும்னு சொல்லுவாங்க.. அது எனக்கு இப்போ நடந்திருக்கு. ரொமான்ஸ் படம் செய்யனும்னா தயாரிப்பாளருக்கும் ரொமான்ஸ் பிடிச்சிருக்கனும். ரவி சார் மிகவும் ரொமான்ஸ் ஆனவர் அது எனக்கு வரம். விவேக் மெர்வின் இந்த முழுப்படத்தின் பாடல்களையும் ஹிட் செய்து கொடுத்து விட்டார்கள். புகழ் கேரக்டரில் முதலில் விவேக் சார் நடிக்க வேண்டியது, ஆனால் புகழ் அட்டகாசமாக செய்து கொடுத்தார். தேஜுவுக்கு முன் நிறைய பேரை தேடிக்கொண்டிருந்தேன் இறுதியாக தான் அவர் உள்ளே வந்தார் நன்றாக செய்துள்ளார். அவந்திகாவும் நன்றாக நடித்துள்ளார். அஷ்வினுக்கு இருக்கும் ரசிகர்களை பார்க்கும்போது ஒரு சூப்பர் ஸ்டாரை வைத்து படமெடுப்பது போல் உள்ளது. அஷ்வின் புகழ் காம்போ இப்படத்தில் சூப்பராக இருக்கும். இந்தப்படத்தில் எல்லாமே ரொம்ப லவ்லியாக இருந்தது, உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். டிசம்பர் 24 படம் ரிலீஸ் ஆகிறது உங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் A.ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ள “என்ன சொல்ல போகிறாய்” படத்தை Trident Arts நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரித்துள்ளார். தொழில்நுட்ப குழுவில் ரிச்சர்ட் M நாதன் (ஒளிப்பதிவு ), G.துரைராஜ் (கலை), மதிவதனன் (எடிட்டர்), பாலகுமாரன் M (உரையாடல்), அப்சர் R (நடன அமைப்பு), A கீர்த்திவாசன் (ஸ்டைலிஷ்), ஜெயராமன் (தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்), S.ரூபினி (புரடக்சன் கண்ட்ரோலர் ) , D.செல்வராஜ்-SN அஷ்ரஃப் (தயாரிப்பு நிர்வாகி), சுரேஷ் சந்திரா -ரேகா D one (மக்கள் தொடர்பு), Beat Route/ஹரிஹரன் (கிரியேட்டிவ் & மார்க்கெட்டிங்), தண்டோரா (பப்ளிசிட்டி டிசைன்ஸ்).

Share.

Comments are closed.