மனம் வருடும் காதல் கதை “என்ன சொல்ல போகிறாய்”!
“என்ன சொல்ல போகிறாய்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !
Trident Arts நிறுவன தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் நாயகனாக நடிக்கும், A.ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், “என்ன சொல்ல போகிறாய்”. இன்றைய தலைமுறை இளைஞர்களை அசத்த, மனம் வருடும் காதல் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், ரசிகர்களின் கோலாகல கொண்டாட்டத்துடன் நடைபெற்றது.
முதலில் படத்தின் பாடல்களை கலைகுழுவினர் மேடையில் ரசிகர்கள் ஆராவாரத்துடன் அரங்கேற்றினர். இதனை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வில்
Trident Arts நிறுவன தயாரிப்பாளர் R.ரவீந்திரன் பேசியதாவது…
இந்தப்படம் பத்தி கலைஞர்கள் தான் பேசனும் . 500 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ளேன். நிற...

