இயக்குநர் சசிகுமாரிடம் பாராட்டுப்பெற்ற இ.வி.கணேஷ்பாபு!

0

 76 total views,  1 views today

கரோனா அச்சுறுத்தலுக்காக
தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில் பல
விளம்பரப்படங்களையும் உருவாக்கி பல்வேறு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அந்த
விளம்பரப்படங்களை தொடர்ந்து இயக்கி வரும்
இ.வி.கணேஷ்பாபு இப்போது ஒரு பாடலையும் எழுதி, இயக்கி இருக்கிறார்.

இது பற்றி இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது.
“கவசம் இது முகக்கவசம்” என்ற பாடலை நான் எழுதி,இயக்கி அது இப்போது பல முன்னணி தொலைக்காட்சிகள்
மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்து வருகிறது.
இந்த பாடலில்
இயக்குனர் சசிகுமார், தேவயானி, ஆரி, ஸ்ரீகாந்த்தேவா,
சதுரங்கவேட்டை நடராஜ்(நட்டி),
ஆடுகளம்ஜெயபாலன்
ரமேஷ்கண்ணா,
ரவிமரியா,வையாபுரி ஆகியோர் பங்கேற்று இருக்கிறார்கள்.

நான் எழுதிய இந்த பாடல் வரிகளைப்பற்றி இயக்குனர் சசிகுமார் கூறும்போது “பாடலில் எளிமையான
வரிகள்தான் மக்களை சென்றடையும். அந்த வகையில் மிகவும் எளிமையாக சிறப்பாக வரிகள் இருக்கிறது” என்று அவர்
மனம்விட்டு பாராட்டியதை மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கின்றேன்.

தர்மதுரை படத்தில்”ஆண்டிபட்டி கணவா காத்து” பாடலின் மூலம் பாடகராக பிரபலமடைந்த செந்தில்தாஸ் இந்த பாடலுக்கு இசையமைத்திருக்கிறார்.
மெட்டிஒலி சாந்தி நடனம் அமைக்க செந்தில்தாஸ்,
மாலதிலட்சுமணன், மற்றும் முகேஷ் இணைந்து இப்பாடலை பாடியிருக்கிறார்கள்.
செழியன்குமாரசாமி தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருக்கிறார்.

தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்து வரும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கட்டில் திரைப்படத்தின் இயக்குனரும், கதாநாயகனுமான
இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார்.

Share.

Comments are closed.

CLOSE
CLOSE