மசாலா காஃபியின் தனியிசைப் பாடல்!

0

 136 total views,  2 views today

தென்னகத்தின் மிகப் பிரபலமான உற்சாகமான இசைக்குழுக்களில் ஒன்றான மசாலா காஃபியின் நிறுவனர் வருண் சுனில், தனது முதல் தனியிசைப் பாடலை டிசம்பர் 6, 2019 அன்று வெளியிட்டுள்ளார். மிகவும் குதூகலமான, கேட்டால் நம் மனதில் தொற்றிக்கொள்கிற இந்தப் பாடலில், பாரம்பரிய ஒலிகளுடன், எலக்ட்ரானிக் இசையும் சேர்ந்திருக்கிறது. இந்தப் பாடலை எழுதியவர் கு கார்த்திக். இதில் வருண் சுனில் தோன்றுகிறார். தேவன் இயக்கியுள்ளார். தமிழக தன்னிசை சூழலில் தனது இந்தப் பாடல் நீண்ட காலம் நிலைத்திருப்பதற்கான தொடக்கமாக எண்ணுகிறார் வருண் சுனில். அவர் சோனி மியூஸிக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளார். இந்த மியூஸிக் வீடியோவில், இந்தப் பாடலுக்கென்றே பிரத்யேகமாக ஒரு நடன அசைவும், வருண் முதல் முறையாக தனது இசையில் ஆடுவதையும் பார்க்கலாம்.
 
 
Share.

Comments are closed.