வைரல் வரவேற்பில் ஹன்ஷிகா மோத்வானியின் “மஹா” திரைப்பட டீஸர் !

0

 184 total views,  1 views today

நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் 50 வது திரைப்படமான “மஹா” அறிவிப்பு வெளியானது முதலே, அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஹன்ஷிகா மோத்வானியின் அசத்தல் தோற்றத்துடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், படத்தில் நட்சத்திர நடிகர் சிலம்பரசன் TR பங்கு கொள்வது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது. இந்த நிலையில், நேற்று 2021 ஜூலை 2 அன்று இப்படத்தின் டீஸரை முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் வெளியானது முதல் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று, வைரலாகி வருகிறது.

2 நிமிடங்கள் ஓடக்கூடிய “மஹா” படத்தின் டீஸரில், மிக வித்தியாசமான கதைகளத்தில், இதுவரை பார்த்திராத தோற்றத்தில் ஹன்ஷிகா மோத்வானி கலக்கியுள்ளார். மேலும் படத்தில் சிலம்பரசன் TR, ஶ்ரீகாந்த், கருணாகரன் பாத்திரங்களும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், டீஸரில் வெளிப்பட்டிருக்கிறது.

டீஸருக்கு கிடைத்து வரும் பெரும் வரவேற்பில் “மஹா” படக்குழு உற்சாகத்தில் திளைத்து வருகிறது. விரைவில் படத்தின் ட்ரெயலர், இசை வெளியீடு மற்றும் உலகளவிலான திரை வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.

முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி கலக்கியிருக்கும் “மஹா” திரைப்படத்தில்
நடிகர் STR சிம்பு மிக முக்கியமான கேமியோ பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஶ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா, பேபி மானஸ்வி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குநர் U.R. ஜமீல் இயக்கியுள்ள, இப்படத்தில் அஞ்சு விஜய் இணை இயக்கம் செய்துள்ளார்.

இசையமைப்பாளர் – ஜிப்ரான்

ஒளிப்பதிவு – J. லக்‌ஷ்மன் ( M.F.I)

படத்தொகுப்பு – J.R. ஜான் ஆப்ரஹாம்

கலை இயக்கம் – மணிமொழியன் ராமதுரை

பாடல்கள் – கார்கி, விவேகா, சௌந்தரராஜான்

நடன அமைப்பு – காயத்திரி ரகுராம், ஷெரிஃப்

சண்டைப்பயிற்சி- தினேஷ் சுப்பராயன், ஸ்டன்னர் ஷாம்

ஸ்டில்ஸ் – ரவீந்திரன் KM

சவுண்ட் இன்ஞ்னியர் – அருண் குமார்

ஆடியோகிராபி – M.R. ராஜாகிருஷ்ணன்

பப்ளிஷிட்டி டிசைன் – ஜோஷப் ஜாக்சன்

Etcetera Entertainment சார்பில் திரு மதியழகன் மற்றும் Streams Corporations (Production & Distribution) சார்பில் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் தயாரிக்கிறார்கள்.

Share.

Comments are closed.