‘சிங்கிள் பசங்க’ பாடல் மூலம் மீண்டும் அனைவரையும் வசீகரித்த ‘ஹிப்ஹாப்’ ஆதி!

0

Loading

தன்னுடைய ஆல்பம் மூலம் வெற்றி மேல் வெற்றி பெற்று இளைஞர்களின் அடையாளமாகத் திகழ்கிறார் ‘ஹிப்ஹாப்’ ஆதி. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான ‘நட்பே துணை’ படத்தில் ‘கேரளா சாங்’ பாடல் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது, அப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். ‘சிங்கிள் பசங்க’ என்று தொடங்கும் அப்பாடல் யூடியூப், சமூக வலைத்தளம் மற்றும் அனைத்து இசை தளங்களிலும் வெளியாகி அனைவராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான பாடல் வரிகள் உள்ளது. இப்பாடல் மூலம் தனக்கென தனி முத்திரை பதிந்ததால் மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறார் ‘ஹிப்ஹாப்’ ஆதி.
 
ஆதி கதாநாயகனாக நடிக்க, அனகா கதாநாயகியாக நடிக்கிறார். பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இப்படத்தை, அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கிறார்.
 
தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – அரவிந்த் சிங், படத்தொகுப்பு – பென்னி ஆலிவர், கதை,  திரைக்கதை மற்றும் வசனம் – ஸ்ரீகாந்த் & தேவேஷ் ஜெயச்சந்திரன், பாடல்கள் – ‘ஹிப்ஹாப்’ ஆதி & அறிவு, கலை – குருராஜ், சண்டை பயிற்சி – பிரதீப் தினேஷ், நிர்வாக தயாரிப்பு – என்.மணிவண்ணன், நடனம் – சந்தோஷ் & சிவரோக் சங்கர், காட்சி அமைப்பு – சனத், உடைகள் – ப்ரீத்தி நாராயணன், டிசைன்ஸ் – அமுதன் ப்ரியன் மற்றும் மற்ற தொழில்நுட்ப குழு.
 
Share.

Comments are closed.