சர்வதேச இசையமைப்பாளர் பட்டியலில் மாரீஸ் விஜய்

0

 336 total views,  1 views today

’விஞ்ஞானி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மாரீஸ் விஜய். குறிப்பிட்டு சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் இவர், சமீபத்தில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய டிரினிட்டி வேவ்ஸ் என்னும் மியூசிக் ஸ்டுடியோவை அதிக பொருட்செலவில் உருவாக்கி இருக்கிறார். 

இவர் இசையில் வில்லவன் எனும் மலேசிய தமிழ் படம் உருவானது. இப்படத்தின் டிரெய்லர் தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய கிரிக்கெட் போட்டியின்போது பிரம்மாண்ட அரங்கில் வெளியிடப்பட்டது. இதைப்பார்த்த உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் மற்றும் பல நடிகர்கள் படக்குழுவினரை பாராட்டினார்கள்.

அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் மலேசியாவில் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டது. வெளியான சில நாட்களிலேயே இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக மாரீஸ் விஜய்யின் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இவரது இசைக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. மலேசியாவில் நடைபெறும் சினி பீஸ்ட் மலேசியா விருது 2019 – ல் சிறந்த சர்வதேச இசை அமைப்பாளர் பட்டியலில் வில்லவன் படத்திற்காக இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விருது பட்டியலில் இந்திய இசையமைப்பாளர் ஒருவர் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. இந்தப் பெருமையை இசையமைப்பாளர் மாரீஸ் விஜய் பெற்றிருக்கிறார்.

இந்த விருது விழா ஜனவரி 31ம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இசையமைப்பாளர் மாரீஸ் விஜய் தற்போது ஹாலிவுட்டில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.