‘கடலில் கட்டுமரமாய்’ படத்தைப் பார்த்து பாராட்டிய ஸ்டாலின்

0

 321 total views,  1 views today

யுவராஜ் முனிஷ் இயக்கி ரக்ஷன், ரித்திகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கடலில் கட்டுமரமாய்’. இப்படம் விவசாயிகளை மையப்படுத்தி எடுத்து இருக்கிறார்கள். இப்படத்தை சினிமா பிரபலங்கள் பலர் பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் துணைவியார் துர்கா ஸ்டாலின் உடன், விவசாயிகளை முன்னிலைப்படுத்தியிருக்கும் இப்படத்திற்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார். அத்துடன் அப்படக்குழுவினர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Share.

Comments are closed.