கதிர் சூரி இணைந்து கலக்கும் ‘சர்பத்’

0

 473 total views,  1 views today

7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் – வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios) நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் ‘சர்பத்’

அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில் இப்படத்தின் நாயகனாக பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு  முதல்முறையாக  சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா  அறிமுகமாகிறார்.  முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து,  ஆகியோர் நடிக்கிறார்கள்.

நம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா பேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பிரபாகரன். டெக்னிக்கல் டீமில் கேமராமேனாக இயக்குநரின் பெயரைக் கொண்ட பிரபாகரன் என்பவர் இணைந்து இருக்கிறார். எடிட்டராக பிரசன்னா ஜி கே இருக்கிறார். இசை அமைப்பாளராக சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜிஸ் இருக்கிறார். தரமணி, பேரன்பு உள்பட பல படங்களில் பணியாற்றிய குமார் இப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

படத்தில் நடக்கும் சூழலும் படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும் ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைத்து கொண்டாட வைக்கும்” என்கிறார் இயக்குநர். 

இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்று வட்டாரங்களிலும், ஒருசில முக்கிய காட்சிகள் சென்னையிலும் படமாக்கப்பட்டுள்ளது.  

Share.

Comments are closed.