Friday, October 23

காவல் துறை உங்கள் நண்பன்

Loading

ஒரு திறமையான பாடகரால் மட்டுமே  பாடலின் தன்மையை மேலோக்கி கொண்டு செல்ல முடியும்.இதை பல முன்னோடிகள் செய்திருப்பதால் மக்களும் தங்கள் இசை ஞானத்தை வளர்த்து பாடகர்களையும் பாடலாசிரியர்களையும் பாராட்டும் அளவிற்க்கு வளர்ந்து விட்டனர்.
இந்த லிஸ்டில் பாடகர் ஹரிசரண்னின் குரலையும், பாடல்களையும் ரசிப்பதற்கென்று தனி பட்டாளம் உள்ளது. தனது ரசிகர்களை பாடல்கள் மூலம் மகிழ்விக்கும் ஹரிச்சரண் தனது அடுத்த பாடலை “காவல் துறை உங்கள் நண்பன் ” என்ற படத்திற்க்காக பாடியுள்ளார். 
“ராணி தேனீ” என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்பாடலை கதைக்குப் பொருத்தமாக இசையமைத்திருக்கிறாராகள் இசையமைப்பாளர்கள்
ஆதித்யா- சூர்யா. இந்த பாடலுக்கு வரிகள் எழுதியது ஞானக்குமரவேல்.
 
நடிகர் சுரேஷ் ரவி மற்றும் நடிகை ரவீனா ரவி நடித்திருக்கும் “காவல் துறை உங்கள் நண்பன்” , காவலருக்கும் -டெலிவரி executive உறவை பற்றி பேசும். காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படத்தை RDM இயக்க , பி.ஆர்.டாக்கிஸ் மற்றும் வைட் மூன் டாக்கிஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.