“சந்திரமௌலி” என்ற சொந்தப் பெயருக்கு மாறிய ‘கயல்’ சந்திரன்…

0

 358 total views,  1 views today

அன்புடையீர்
 
எனது அறிமுக படமான ‘கயல்’ முதல் பேராதரவு நல்கி வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம்.
 
எனதுள்ளம் நன்றிப்பெருக்கில் நிறைந்திருக்கும் இவ்வேளையில், உங்கள் நல் ஆதரவோடு மேலும் ஊக்கமுடன் உழைத்து நல்ல படங்களில் நடித்து உங்களை மகிழ்விக்க மனம் விழைகிறது.
 
இதுநாள் வரை சந்திரன் என புனை பெயரில் அறியப்பட்ட நான் இனி என் உண்மை பெயரான “சந்திரமௌலி” என அறியப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
 
எனவே, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் “சந்திரன்” என்ற என் பெயரை இனி “சந்திரமௌலி” என்று அழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
 
எனது இயக்குநர்கள் , தயாரிப்பாளர்கள், நண்பர்கள் , பத்திரிகை/ஊடக நண்பர்கள் மற்றும் எனது பேரன்புமிக்க ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்  .
 
அன்புடன்
 
சந்திரமௌலி
 

 

Share.

Comments are closed.